லியோ SPOILER ALERT: “LCUவில் தான் வருகிறது!"- உண்மையை உடைத்த விக்ரம் பட ரோலக்ஸ் காட்சியில் நடித்த துணை நடிகர்! ட்ரெண்டிங் வீடியோ இதோ

லியோ படம் LCUவில் இருப்பதாக பகிர்ந்த விக்ரம் பட துணை நடிகர்,vikram junior artist confirms thalapathy vijay in leo in lcu | Galatta

தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் இரண்டாவது படமாக வெளிவர இருக்கும் லியோ திரைப்படம் LCUவில் வருவதாக விக்ரம் திரைப்படத்தில் நடித்த துணை நடிகர் தெரிவித்திருக்கிறார். மிகப் பிரம்மாண்டமாகவும் மிரட்டலான அதிரடி ஆக்சன் படமாகவும் தயாராகி இருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி உலகமெங்கும் மிகப் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் வெளிவர இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தனது கைதி மற்றும் விக்ரம் படங்களை கொண்டு உருவாக்கி இருக்கும் LCU வில் தளபதி விஜயின் லியோ படம் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக கிளம்பி இருக்கிறது.

இதனிடையே முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு (2022) வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தின் இறுதியில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டிய காட்சியில் தலை வெட்டப்பட்ட ஒரு அடியாள் கதாபாத்திரத்தில் நடித்த துணை நடிகர், நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் லியோ திரைப்படத்தின் அட்டகாசமான சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசிய போது, “இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் அடுத்த படமாக வரும் லியோ திரைப்படத்தில் வாய்ப்பு கேட்டு நீங்கள் போனீர்களா அவரை பார்த்தீர்களா?” என கேட்டபோது, "ஆமாம் இதிலேயும் வாய்ப்பு கேட்டு போனேன். ஆனால் லோகேஷ் சாரை பார்க்க முடியவில்லை . அங்கிருந்த அசிஸ்டன்ட் இயக்குனர்கள் அசோசியேட் இயக்குனர்களை பார்த்து பேசினேன். "அண்ணே தயவு செஞ்சு இங்க வந்துடாதீங்க" என சொன்னார்கள். “இந்த படத்தில் உங்களுக்கு எந்த கதாபாத்திரமும் இல்லை எதுவும் இல்லை தயவு செய்து வந்து விடாதீர்கள்” என சொன்னார்கள். இந்த படம் LCUவில் தானே வருகிறது. அதனால் விக்ரம் படத்தில் நடித்தவர்களோ அல்லது மாஸ்டர் படத்தில் நடித்தவர்களோ யாருமே வரக்கூடாது என சொல்லிவிட்டார்கள்.” என்றார். 

தொடர்ந்து அவரிடம், “யாருமே வரக்கூடாது என்றார்களா? அல்லது அந்த படத்தில் இறந்தவர்கள் இதில் வரக்கூடாது என்றார்களா?” என கேட்டபோது, “அப்படியும் இருக்கலாம் ஆனால் என்னை பொறுத்தவரை யாருமே வரக்கூடாது என்று தான் சொன்னார்கள். “அண்ணே அந்த படத்துல இருக்கிறவங்க யாருமே இந்த படத்துல இல்ல இது மொத்தமும் புது டீம் தான். அதனால தயவு செஞ்சு வந்துறாதீங்க தயவு செஞ்சு கோச்சிக்காதீங்க” என சொன்னார்கள்.” என்று தெரிவித்திருக்கிறார். விக்ரம் திரைப்படத்தின் ரோலக்ஸ் கேரக்டர் வந்த ஒரே காட்சியில் நடித்திருந்தாலும் இந்த துணை நடிகர் பலருக்கும் பிரபலமான முகமாக மாறி இருந்த நிலையில், தற்போது இவர் லியோ திரைப்படம் LCUவில் இருப்பதாக கொடுத்திருக்கும் இந்த அப்டேட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் இந்த துணை நடிகர் படத்தில் நடிக்காததால் இது குறித்து முற்றிலுமாக எடுத்துக் கொள்ளவும் முடியாது என்றும் பல ரசிகர்கள் இதனை பகிர்ந்து வருகின்றனர். சோசியல் மீடியாவில் தற்போது வைரல் ஆகி வரும் இந்த ஸ்பெஷல் பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.