"எச்சரிக்கையே கிடையாது தூக்கிருவோம்!"- தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ படக்குழுவின் அதிரடி நடவடிக்கை! விவரம் உள்ளே

தளபதி விஜயின் லியோ படக்குழுவின் அதிரடி நடவடிக்கை,thalapathy vijay in leo movie crew anti piracy action on leaking pics videos of shoot | Galatta

தளபதி விஜயின் திரைப்பயணத்தில் 67-வது திரைப்படமாக தற்போது தயாராகி வருகிறது லியோ திரைப்படம். பீஸ்ட் திரைப்படத்தின் சமயத்தில் இருந்து தளபதி விஜயின் 67-வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக அறிவிப்புகள் வெளிவந்தன. இதனை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றி தளபதி 67 படத்தின் மீது மிகுந்த ஆர்வத்தை கூட்டியது. அந்த சமயத்தில் தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகும் தருவாயில் இருந்ததால் வாரிசு திரைப்படத்தின் ரிலீசுக்கு பின் அறிவிப்புகளை வெளியிடுவோம் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தார்.

அதன்படி பிப்ரவரி மூன்றாம் தேதி தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் மாஸான ப்ரோமோ வீடியோ வெளிவந்து ஒட்டு மொத்த ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்தது. முன்னதாக கடந்த ஜனவரி 2ஆம் தேதி தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் உருவாகும் லியோ திரைப்படத்தின் தற்போதைய படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. 

தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா கதாநாயகியாக இணைந்திருக்கும் லியோ திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்  பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்தீவ் தாமஸ் ஆகியோருடன் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கலை இயக்குனர் N.சதீஷ்குமாரின் கலை இயக்கத்தில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். அன்பறிவு மாஸ்டர்களின் ஸ்டண்ட் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக தயாராகும் லியோ படத்திற்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்ற ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். 

முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செல்லும் இடங்களில் எல்லாம் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்களை கேட்டுக் கொண்டிருந்த நிலையில், தற்போது தேவையான அளவுக்கான அப்டேட்டுகள் வந்துவிட்டன. இருப்பினும் LCUல் லியோ திரைப்படம் இருக்குமா என்ற அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனிடையே காஷ்மீரில் நடைபெற்று வரும் லியோ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதுவரை எந்த தமிழ் திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது லியோ திரைப்படம் தயாராகி வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இது மாதிரியான புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கொண்டு இருப்பதை தடுக்கும் நடவடிக்கையாக தற்போது படக்குழுவினர் அதிரடி நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்துள்ளது.

அந்த வகையில், MASSBUNK ANTIPIRACY நிறுவனத்தோடு லியோ படக்குழுவினர் இணைந்துள்ளனர். இதுகுறித்து MASSBUNK ANTIPIRACY நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து தளபதி விஜயின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியீடும் பட்சத்தில் எந்த விதமான எச்சரிக்கையும் இன்றி உடனடியாக நீக்கப்படும்" என அறிவித்துள்ளது. எனவே இனிவரும் நாட்களில் லியோ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் வீடியோக்களும் லீக் ஆவது நிறுத்தப்படும் அல்லது குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து MASSBUNK ANTIPIRACY நிறுவனம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு இதோ…
 

Refrain from sharing the leaked pics/videos taken from the shooting spot of @actorvijay’s #Leo Aka #Thalapathy67.
The infringing links will be removed immediately without any further warning !@Dir_Lokesh @7screenstudio #LalitKumar @TheRoute @Jagadishbliss @MassBunk_Anti pic.twitter.com/XRfhZ0JXSS

— MassBunk Antipiracy (@MassBunk_Anti) February 12, 2023

தொடரும் தளபதி விஜயின் வாரிசு பட கொண்டாட்டம்... சர்ப்ரைஸாக வந்த ஜிமிக்கி பொண்ணு பாடலின் முழு வீடியோ இதோ!
சினிமா

தொடரும் தளபதி விஜயின் வாரிசு பட கொண்டாட்டம்... சர்ப்ரைஸாக வந்த ஜிமிக்கி பொண்ணு பாடலின் முழு வீடியோ இதோ!

சிலம்பரசன்TRன் வெந்து தணிந்தது காடு படக்குழுவின் காதலர் தின பரிசு… ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு ARரஹ்மானின் ட்ரீட் இதோ!
சினிமா

சிலம்பரசன்TRன் வெந்து தணிந்தது காடு படக்குழுவின் காதலர் தின பரிசு… ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு ARரஹ்மானின் ட்ரீட் இதோ!

இயக்குனர் என்பதை தாண்டி அஜித் குமாரின் ரசிகர் என காட்டிய விக்னேஷ் சிவன்! வைரலாகும் புகைப்படம் இதோ
சினிமா

இயக்குனர் என்பதை தாண்டி அஜித் குமாரின் ரசிகர் என காட்டிய விக்னேஷ் சிவன்! வைரலாகும் புகைப்படம் இதோ