இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் NEELAM BOOKS-ஐ திறந்து வைத்த உலக நாயகன் கமல்ஹாசன்! புகைப்படங்கள் இதோ

பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் NEELAM BOOKS-ஐ திறந்து வைத்த கமல்ஹாசன்,Kamal haasan inaugurated director pa ranjith neelam books | Galatta

இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற கலைஞரான உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக இந்தியன் 2  ரிலீஸ் ஆகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து நாயகன் திரைப்படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் KH234 திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார்.

இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் இயக்கும் அடுத்தடுத்த திரைப்படங்களில் உலகநாயகன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதிலும் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க திட்டம் இருப்பதாக விக்ரம் திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் கமல்ஹாசன் அவர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இயக்குனர் பா.ரஞ்சித் முதல் முறையாக சீயான் விக்ரமை வைத்து இயக்கும் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே தனது நீலம் பண்பாட்டு மையத்தின் மூலம் பல நற்செயல்களை செய்து வரும் இயக்குனர் பா.ரஞ்சித் தனது NEELAM BOOKS எனும் புத்தக நிலையத்தை தற்போது துவங்கி இருக்கிறார். சென்னையின் எக்மோரில் அமைந்துள்ள இந்த புத்தக நிலையத்தை உலகநாயகன் கமல்ஹாசன் இன்று பிப்ரவரி 12ஆம் தேதி திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உலக நாயகன் கமல்ஹாசன்,

"உயிரே.. உறவே.. தமிழே.. வணக்கம்! இது என்னுடைய வழக்கமான மேடை பேச்சுகளில் நான் உபயோகிக்கும் வார்த்தை என்றாலும், இதுதான் என் வாழ்க்கையின் உண்மை தத்துவம். அலங்காரத்திற்காக சொல்லும் வார்த்தை அல்ல இதுதான் நான் உயிர் வாழ்வதற்கான காரணம். இந்த உறவு இருந்தால்தான் நான் நிமிர்ந்து நிற்க முடியும். என் மொழி இருந்தால்தான் நான் இவர்களோடு அளவளாவ முடியும். இது மூன்றையும் காக்க வேண்டியது என் கடமை என் தேவை. இவர் (பா.ரஞ்சித்) நிறைய சினிமாக்கள் எல்லாம் எடுத்திருக்கிறார் அந்த ஆரம்ப விழாக்களுக்கு எல்லாம் நான் வரவில்லை. அதைவிட மிக முக்கியமான ஒரு விஷயம், நானும் இவரும் இல்லாத போதும் இருக்கப்போகும் ஒரு தாக்கம் இது. எப்படி நான் 35 வருடங்களுக்கு முன்பு 26 இதழ்கள் மட்டுமே நடத்தி முடித்த மய்யத்தை பற்றிய பேச்சு இன்றும் இருக்கிறதோ அதுபோன்று இங்கே நம் சரித்திரத்தைச் சொல்லும் பொழுது  முயன்றார்கள் பலர் முயன்றார்கள் அதில் நீலம் என்ற ஒரு பண்பாட்டு மையம் இயங்கிக் கொண்டிருந்தது, நீங்கள் எத்தனை காலம் இயங்குகிறீர்களோ அத்தனை நூற்றாண்டுகள் உங்களுக்காயின். அரசியல் என்பது தனியாகவும் நம் கலாச்சாரம் என்பது தனியாகவும் வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் நாம் உருவாக்கியதுதான் அரசியல். மக்களுக்கானது தான் அரசியல். அதை திருப்பிப்போட்டு தலைகீழாக பிடித்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆளும் கட்சி ஆள்பவர்கள் என்னும் வார்த்தையே இனி வரக்கூடாது என்று நினைக்கிறேன். நாம் நியமித்தவர்கள் அவர்கள் என்னும் எண்ணம் மக்களுக்கு வரும் பட்சத்தில் ஜனநாயகம் நீடூழி வாழும். அப்படி இல்லாமல் தலைவனை வெளியே தேடிக் கொண்டிருக்கும் தலைவர்கள் பலர் இங்கே கீழே குடிமகன்களாக அமர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் தன் அளவில் தலைவன் தான் என்பதை உணரும் பட்சத்தில் உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக இந்தியா வரக்கூடும்.  என்னுடைய முக்கியமான எதிரி அரசியல் எதிரி என்று பார்க்கும்போது அது சாதிதான். அதை நான் இன்று சொல்லவில்லை, 21 வயது பையனாக இருக்கும் போதே சொல்லிக் கொண்டிருந்தேன். இப்போது அதை இன்னும் நல்ல வார்த்தைகளை சொல்லும் பக்குவம் எனக்கு வந்திருக்கிறதே, தவிர கருத்து மாறவே இல்லை. சாதியை அரசியலில் இருந்து நீக்க வேண்டும் என்பது எனக்கு மூன்று தலைமுறைக்கு முன்பிருந்த அம்பேத்கர் அவர்கள் ஆரம்பத்தில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்றும் நடந்த பாடில்லை. அந்த தொடர் போராட்டத்தின் ஒரு நீட்சியாக தான் நான் நீலம் பண்பாட்டு மையத்தையும் நான் பார்க்கிறேன். ஸ்பெல்லிங் வேண்டுமென்றால் வேறாக இருக்கலாம் மய்யமும் நீளமும் ஒன்றுதான். ரஞ்சித் அவர்களுக்கு தான் ஆரம்பித்து வைத்த இந்த போராட்டம் அவருக்கு இன்னும் தாடி எல்லாம் வெள்ளையான பிறகு இதையே பார்த்து அவரே தன்னுடைய முயற்சிக்கு ரசிகராக மாற வேண்டும் என்பதுதான். என்னுடைய வாழ்த்து இங்கே அவருடன் இருக்கும் அவருடைய சகோதரர்கள் அனைவருக்குமே இந்த வியப்பு மேலிட வேண்டும் வருடங்கள் தொடர்ந்து செய்யும்போது நிறைய சிக்கல்கள் தடங்கல்கள் வந்து கொண்டே இருக்கும். அது இல்லாமல் வாழ்க்கை இல்லை."

எனக் குறிப்பிட்டு இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களுக்கும் நிலம் பண்பாட்டு மையத்திற்கும் தனது வாழ்த்துக்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த அற்புத நிகழ்வின் புகைப்படங்கள் இதோ…
 

நீலம் பதிப்பகத்தின் புத்தகங்கள் மட்டுமில்லாமல் அனைத்து அரசியல் சார்ந்த புத்தகங்களும்... நீலம் புக்ஸ் விற்பனையகத்தில் கிடைக்கும். #neelambooks #neelamspace #neelam @beemji @ikamalhaasan @NeelamBooks @iraianbu17 @NeelamSocial @Neelam_Culture pic.twitter.com/B9oO9URQF0

— Neelam Publications (@NeelamPublicat1) February 12, 2023

சிலம்பரசன்TRன் வெந்து தணிந்தது காடு படக்குழுவின் காதலர் தின பரிசு… ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு ARரஹ்மானின் ட்ரீட் இதோ!
சினிமா

சிலம்பரசன்TRன் வெந்து தணிந்தது காடு படக்குழுவின் காதலர் தின பரிசு… ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு ARரஹ்மானின் ட்ரீட் இதோ!

இயக்குனர் என்பதை தாண்டி அஜித் குமாரின் ரசிகர் என காட்டிய விக்னேஷ் சிவன்! வைரலாகும் புகைப்படம் இதோ
சினிமா

இயக்குனர் என்பதை தாண்டி அஜித் குமாரின் ரசிகர் என காட்டிய விக்னேஷ் சிவன்! வைரலாகும் புகைப்படம் இதோ

சிலம்பரசன்TRன் வெந்து தணிந்தது காடு பட ஸ்பெஷல் ட்ரீட் கொடுக்கும் ARரஹ்மான்... காதலர் தினத்திற்கு அட்வான்ஸாக வரும் பரிசு! விவரம் இதோ
சினிமா

சிலம்பரசன்TRன் வெந்து தணிந்தது காடு பட ஸ்பெஷல் ட்ரீட் கொடுக்கும் ARரஹ்மான்... காதலர் தினத்திற்கு அட்வான்ஸாக வரும் பரிசு! விவரம் இதோ