தொடரும் தளபதி விஜயின் வாரிசு பட கொண்டாட்டம்... சர்ப்ரைஸாக வந்த ஜிமிக்கி பொண்ணு பாடலின் முழு வீடியோ இதோ!

தளபதி விஜயின் வாரிசு பட ஜிமிக்கி பொண்ணு பாடலின் முழு வீடியோ,thalapathy vijay in varisu movie jimikki ponnu full video song | Galatta

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் அடுத்ததாக லியோ திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி விஜய் இணைந்துள்ள லியோ பிளடி ஸ்வீட் திரைப்படத்தின் அதிரடியான அறிவிப்பு வீடியோ கடந்த பிப்ரவரி 3ம் தேதி வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி தொடங்கப்பட்டு தொடரந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்சமயம் லியோ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்க, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்  பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்தீவ் தாமஸ் மற்றும் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் லியோ திரைப்படத்தில் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் ரிலீசாகி பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக அனைத்து வயது ரசிகர்களும் கொண்டாடும் திரைப்படமாக ரசிக்கப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபீஸில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. முதல்முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடபல்லி இயக்கத்தில் தளபதி விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, SJ.சூர்யா, குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா க்ரிஷ், VTV கணேஷ், சதீஷ், பிக்பாஸ் சம்யுகதா உள்ளிட்டோர் வாரிசு படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள வாரிசு திரைப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய, தமன்.S இசையமைத்துள்ளார். முதல்முறையாக தளபதி விஜய் உடன் கைகோர்த்த இசையமைப்பாளர் தமன்.S இசையில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரிலீசுக்கு முன்பே வைரல் ஹிட்டடித்தன. குறிப்பாக ரஞ்சிதமே பாடல் இந்த ஆண்டின் ஃபேவரட் பாடல்களை ஒன்றாக இடம்பெறும் வகையில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவராலும் கொண்டாடப்பட்டது.

இந்த வரிசையில் வாரிசு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஜிமிக்கி பொண்ணு பாடலும் அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்தது. துள்ளலான இசையும் தளபதி விஜயின் துடிப்பான நடனமும் திரையரங்கில் இப்பாடலை கொண்டாட வைத்தது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜிமிக்கி பொண்ணு பாடலின் ஒரு வீடியோ வெளிவந்த நிலையில், தற்போது ஜிமிக்கி பொண்ணு பாடலின் முழு வீடியோவை படக்குழுவினர் சர்ப்ரைசாக வெளியிட்டுள்ளனர். தளபதி விஜயின் ஸ்டைலான நடனத்தோடு வெளிவந்துள்ள ஜிமிக்கி பொண்ணு பாடலின் முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

சிலம்பரசன்TRன் வெந்து தணிந்தது காடு பட ஸ்பெஷல் ட்ரீட் கொடுக்கும் ARரஹ்மான்... காதலர் தினத்திற்கு அட்வான்ஸாக வரும் பரிசு! விவரம் இதோ
சினிமா

சிலம்பரசன்TRன் வெந்து தணிந்தது காடு பட ஸ்பெஷல் ட்ரீட் கொடுக்கும் ARரஹ்மான்... காதலர் தினத்திற்கு அட்வான்ஸாக வரும் பரிசு! விவரம் இதோ

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அஜித்குமாரின் சிரிப்பு... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ!
சினிமா

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அஜித்குமாரின் சிரிப்பு... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ!

உங்க எதிர்பார்ப்ப பெருசா வச்சுக்கோங்க அதைவிட பெருசா படம் இருக்கும்... தளபதி விஜயின் லியோ பட செம்ம தகவல் கொடுத்த பிரபல இயக்குனர்!
சினிமா

உங்க எதிர்பார்ப்ப பெருசா வச்சுக்கோங்க அதைவிட பெருசா படம் இருக்கும்... தளபதி விஜயின் லியோ பட செம்ம தகவல் கொடுத்த பிரபல இயக்குனர்!