இயக்குனர் என்பதை தாண்டி அஜித் குமாரின் ரசிகர் என காட்டிய விக்னேஷ் சிவன்! வைரலாகும் புகைப்படம் இதோ

அஜித் குமார் புகைப்படத்தை ஸ்டேட்டஸில் வைத்த விக்னேஷ் சிவன்,director vignesh shivan posted ajith kumar latest photo in his insta status | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான நானும் ரவுடி தான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் குறிப்பிடப்படும் இயக்குனராக பிரபலமடைந்தார்.

பின்னர் முதல் முறையாக நடிகர் சூர்யாவுடன் கைகோர்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக்காக உருவாக்கிய தானா சேர்ந்த கூட்டம் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து NETFLIX தளத்தில் வெளிவந்த பாவக்கதைகள் ஆந்தாலஜி வெப்சீரிசில் லவ் பண்ணா உட்ரனும் எனும் எபிசோடை இயக்கினார் விக்னேஷ் சிவன்.

கடைசியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா மூவரும் இணைந்து நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து தனக்கென தனி பாணியில் அனைத்து ரசிகர்களும் விரும்பும் வகையிலான லைட் ஹார்டெட் திரைப்படங்களாக கொடுத்து வரும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் அடுத்தடுத்த படங்களுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தனது அடுத்த படத்தில் முதல் முறையாக அஜித் குமார் உடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைவதாக அறிவிப்பு வெளியானது.

முன்னதாக அஜித்குமாரின் வலிமை திரைப்படத்தில் பாடல்கள் எழுதிய இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குனராக அஜித்குமாரை வைத்து இயக்கும் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் அஜித்குமாரின் 62 வது படமாக விக்னேஷ் சிவன் இயக்கும் AK62 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே சமீபத்தில் AK62 திரைப்படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியிருப்பதாக தகவல்கள் வந்தன. மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக இயக்குனர் மகிழ்திருமேனி AK62 திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. அதேபோல் வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அனிருத் இணைய உள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட AK62 திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இவை குறித்த அதிகாரப்பூர் அறிவிப்புகள் இதுவரை எதுவும் வெளிவரவில்லை.

AK62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்றால் வேறு எந்த இயக்குனர் இப்படத்தை இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவராத நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகி இருப்பதாக வெளிவந்த தகவல்கள் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தன. முன்னதாக ஸ்காட்லாந்தில் இருக்கும் அஜித் குமாரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. குறிப்பாக அதில் அஜித் குமார் சிரித்தபடி இருக்கும் ஒரு புகைப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. 

இந்நிலையில் அந்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் வைத்தது அனைவரது கவனத்தையும் திருப்பி உள்ளது. தான் ஒரு இயக்குனர் என்பதை தாண்டி எப்போதுமே அஜித்குமாரின் ரசிகன் என்பதை காட்டும் விதமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்குமாரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் வைத்துள்ளார் என தற்போது சமூக வலைதளங்களில் இந்த பதிவு பகிரப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவனின் அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் இதோ…
silambarasan tr in vendhu thaninthathu kaadu movie ost release announcement

உங்க எதிர்பார்ப்ப பெருசா வச்சுக்கோங்க அதைவிட பெருசா படம் இருக்கும்... தளபதி விஜயின் லியோ பட செம்ம தகவல் கொடுத்த பிரபல இயக்குனர்!
சினிமா

உங்க எதிர்பார்ப்ப பெருசா வச்சுக்கோங்க அதைவிட பெருசா படம் இருக்கும்... தளபதி விஜயின் லியோ பட செம்ம தகவல் கொடுத்த பிரபல இயக்குனர்!

ராகவா லாரன்ஸ் - ப்ரியா பவானி ஷங்கரின் ரொமான்டிக்கான பாடாத பாட்டெல்லாம் பாடல்… ருத்ரன் பட அட்டகாசமான வீடியோ இதோ!
சினிமா

ராகவா லாரன்ஸ் - ப்ரியா பவானி ஷங்கரின் ரொமான்டிக்கான பாடாத பாட்டெல்லாம் பாடல்… ருத்ரன் பட அட்டகாசமான வீடியோ இதோ!

திருச்சிற்றம்பலம் வெற்றிக்கு பின் அடுத்த படத்தை அறிவித்த மித்ரன் R ஜவஹர்!- ஹீரோ யார் தெரியுமா? விவரம் உள்ளே
சினிமா

திருச்சிற்றம்பலம் வெற்றிக்கு பின் அடுத்த படத்தை அறிவித்த மித்ரன் R ஜவஹர்!- ஹீரோ யார் தெரியுமா? விவரம் உள்ளே