சிலம்பரசன்TRன் வெந்து தணிந்தது காடு படக்குழுவின் காதலர் தின பரிசு… ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு ARரஹ்மானின் ட்ரீட் இதோ!

வெந்து தணிந்தது காடு பட OST வெளியீடு,silambarasan tr in vendhu thaninthathu kaadu movie ost released | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தனக்கென தனி பாணியில் ஸ்டைலான திரைப்படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்களுக்கென பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது திரைப்படங்களில் கதாநாயகிகள் மற்ற கமர்சியல் திரைப்படங்களில் பயன்படும் வெறும் ஹீரோயின் மெட்டீரியலாக இல்லாமல் கதையின் நாயகியாக இருப்பது மற்றொரு சிறப்பம்சம்.

தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் செம்ம ஸ்டைலான திரைப்படங்களை கொடுத்து வந்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முதல் முறையாக தனது பாணியிலிருந்து முற்றிலும் விலகி மற்றொரு தளத்தில் உருவாக்கிய திரைப்படம் வெந்து தணிந்தது காடு. புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய கதையில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் வழக்கமான தமிழ் சினிமா கேங்ஸ்டர் படங்களில் இருந்து மாறுபட்டு ஒரு நல்ல கேங்ஸ்டர் திரைப்படமாக வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. 

வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்காக தன்னை மிகவும் அர்ப்பணித்துக் கொண்ட நடிகர் சிலம்பரசன்.TR தனது உடல் எடையை மிகவும் குறைத்து முத்து கதாபாத்திரத்தில் கணக்கச்சிதமாக நடித்து அனைத்து ரசிகர்களின் இதயங்களையும் கொள்ளையடித்தார். சிலம்பரசன்.TR உடன் இணைந்து சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சித்தார்த்தா நுன்னி ஒளிப்பதிவில், ஆன்டனி படத்தொகுப்பு செய்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு இசைப்புயல் AR.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த  வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. ரிலீசுக்கு முன்பாகவே வெந்து துணிந்தது காடு திரைப்படம் பாகம் 2 உருவாக இருக்கிறது. அது ரசிகர்களின் வரவேற்பை பொருத்து முடிவு செய்யப்படும் என படக்குழுவினர் அறிவித்தனர். 

அதேபோல் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு படக்குழு எதிர்பார்த்தது போல படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். எனவே வெந்து தணிந்தது காடு பாகம் 2 விரைவில் தயாராகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் - சிலம்பரசன்.TR - இசைப்புயல் AR.ரஹ்மான் எனும் இந்த வெற்றி கூட்டணியில் மூன்றாவது படமாக வெளிவந்த வெந்து தணிந்தது காடு படத்தில் இசைப்புயலின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை இசை மழையில் நனைத்தது என்றே சொல்லலாம். 

குறிப்பாக படத்தின் பின்னணி இசை காட்சிக்கு காட்சி ரசிகர்களை படத்தோடு பயணிக்க வைத்ததற்கும் படத்தின் மிக முக்கியமான காட்சிகளில் கொண்டாட வைத்ததற்கும் மிக முக்கிய பங்கு வகித்தது. அந்த வகையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் பின்னணி இசையின் OST ட்ராக்குகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். இந்நிலையில் காத்திருந்த ரசிகர்களுக்கு காதலர் தின பரிசாக இன்று பிப்ரவரி 12ஆம் தேதி வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் OST வெளியானது. இசைப்புயல் AR.ரஹ்மானின் அட்டகாசமான வெந்து தணிந்தது காடு OST இதோ…
 

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அஜித்குமாரின் சிரிப்பு... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ!
சினிமா

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அஜித்குமாரின் சிரிப்பு... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ!

உங்க எதிர்பார்ப்ப பெருசா வச்சுக்கோங்க அதைவிட பெருசா படம் இருக்கும்... தளபதி விஜயின் லியோ பட செம்ம தகவல் கொடுத்த பிரபல இயக்குனர்!
சினிமா

உங்க எதிர்பார்ப்ப பெருசா வச்சுக்கோங்க அதைவிட பெருசா படம் இருக்கும்... தளபதி விஜயின் லியோ பட செம்ம தகவல் கொடுத்த பிரபல இயக்குனர்!

ராகவா லாரன்ஸ் - ப்ரியா பவானி ஷங்கரின் ரொமான்டிக்கான பாடாத பாட்டெல்லாம் பாடல்… ருத்ரன் பட அட்டகாசமான வீடியோ இதோ!
சினிமா

ராகவா லாரன்ஸ் - ப்ரியா பவானி ஷங்கரின் ரொமான்டிக்கான பாடாத பாட்டெல்லாம் பாடல்… ருத்ரன் பட அட்டகாசமான வீடியோ இதோ!