சொப்பன சுந்தரியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்... அசத்தலான புதிய படத்தின் ரிலீஸ் குறித்த ஸ்பெஷல் அறிவிப்பு!

ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி படம் ரிலீஸ் அறிவிப்பு,Aishwarya rajesh in soppana sundari movie releasing in march | Galatta

தென்னிந்திய சினிமாவின் இன்றியமையாத நடிகைகளில் ஒருவராக உயர்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த 2023 ஆம் ஆண்டில் அடுத்தடுத்து வரிசையாக பல படங்களில் ரசிகர்களுக்கு விருந்து வைக்க தயாராகிவிட்டார். அந்த வகையில், மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்காக இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படமும், பிரபல மலையாள இயக்குனர் ஜியன் கிருஷ்ணா இயக்கத்தில் RJ.பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்த திரில்லர் திரைப்படமான ரன் பேபி ரன் திரைப்படமும் கடந்த 3ம் தேதி ஒரே நாளில் ரிலீஸாகி மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. 

இதனைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் சினிமாவிலும் அடி எடுத்து வைத்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மாணிக் எனும் ஹிந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். அதேபோல் மலையாளத்தில் டொவினோ தாமஸ் உடன் இணைந்து அஜயன்டே ரண்டாம் மோஷனம் படத்தில் நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து, பார்வதி, ஊர்வசி, ரம்யா நம்பீசன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோருடன் இணைந்து HER எனும் திரைப்படத்திலும் நடிக்கிறார். மேலும் நடிகர் ஜோஜு ஜார்ஜ் உடன் இணைந்து புலிமடா எனும் திரைப்படத்திலும் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.

இவற்றிற்கு இடையே தமிழில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்துள்ள மோகன்தாஸ், ஆக்சன் கிங் அர்ஜுனன் இணைந்து நடித்துள்ள தீயவர் குலைகள் நடுங்க, ஒரு நாள் கூத்து மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சன் வெங்கடேஷ் இயக்கத்தில் ஃபர்ஹானா உள்ளிட்ட திரைப்படங்களும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி இருக்கின்றன. முன்னதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயோன் விக்ரமுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அடுத்த வெளிவர தயாராகி இருக்கும் திரைப்படம் சொப்பன சுந்தரி. இயக்குனர் SG.சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சொப்பன சுந்தரி திரைப்படத்தில் லட்சுமி பிரியா சந்திரமௌலி, தீபா ஷங்கர், கருணாகரன், சதீஷ், ரெட்டின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹம்சினி என்டர்டைன்மென்ட் நிறுவனம் மற்றும் ஹூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள சொப்பன சுந்தரி திரைப்படத்திற்கு G.பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் இணைந்து ஒளிப்பதிவு செய்ய K.சரத்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார்.

சொப்பன சுந்தரி திரைப்படத்தின் பாடல்களுக்கு அஜ்மல் தஷீன் இசையமைத்துள்ள நிலையில், சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான சீதாராமன் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் சொப்பன சுந்தரி திரைப்படத்திற்கு பின்னணி இசை சேர்த்துள்ளார். முன்னதாக இந்த பிப்ரவரி மாதத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகி இருக்கும் நிலையில் தற்போது அடுத்த திரைப்படமாக சொப்பன சுந்தரி திரைப்படம் வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பும் டீசன் டிரைலர் குறித்த அறிவிப்புகளும் அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் சொப்பன சுந்தரி திரைப்படம் மார்ச்சில் வெளியிட தயார் நிலையில் இருப்பதை அறிவிக்கும் வகையில் படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அசத்தலான அந்த போஸ்டர் இதோ…

 

#SoppanaSundari @aishu_dil & gang will meet you soon in theaters 👸

All set for March Release 🗓️ @SGCharles2 @LakshmiPriyaaC @Composer_Vishal @Ajmal__Tahseen @thinkmusicindia @Hamsinient @HueboxS @vivek4kr pic.twitter.com/HbwE0dPvH3

— aishwarya rajesh (@aishu_dil) February 11, 2023

இயக்குனர் என்பதை தாண்டி அஜித் குமாரின் ரசிகர் என காட்டிய விக்னேஷ் சிவன்! வைரலாகும் புகைப்படம் இதோ
சினிமா

இயக்குனர் என்பதை தாண்டி அஜித் குமாரின் ரசிகர் என காட்டிய விக்னேஷ் சிவன்! வைரலாகும் புகைப்படம் இதோ

சிலம்பரசன்TRன் வெந்து தணிந்தது காடு பட ஸ்பெஷல் ட்ரீட் கொடுக்கும் ARரஹ்மான்... காதலர் தினத்திற்கு அட்வான்ஸாக வரும் பரிசு! விவரம் இதோ
சினிமா

சிலம்பரசன்TRன் வெந்து தணிந்தது காடு பட ஸ்பெஷல் ட்ரீட் கொடுக்கும் ARரஹ்மான்... காதலர் தினத்திற்கு அட்வான்ஸாக வரும் பரிசு! விவரம் இதோ

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அஜித்குமாரின் சிரிப்பு... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ!
சினிமா

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அஜித்குமாரின் சிரிப்பு... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ!