அட்ரா சக்க இது லிஸ்ட்லயே இல்லையே!- பரபரக்கும் தளபதி 67 படப்பிடிப்பிற்கு புறப்பட்ட விஜய்-லோகேஷ் கனகராஜின் விமான பயண வீடியோ இதோ!

தளபதி 67 படக்குழு காஷ்மீர் புறப்பட்ட வீடியோ வெளியீடு,vijay lokesh kanagaraj in thalapathy67 team kashmir schedule travel video | Galatta

இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் வகையில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது தயாராகி வருகிறது தளபதி விஜயின் அடுத்த திரைப்படமான தளபதி 67. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜயின் வெற்றி கூட்டணியில் தயாராகும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி தொடங்கியது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் தளபதி 67 திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஸ்கின் ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும், தளபதி 67 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கடந்த சில தினங்களாகவே ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தளபதி 67 திரைப்படத்தின் அதிரடியான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் தளபதி67 படத்தின் டைட்டிலும் முதல் அறிவிப்பு ப்ரோமோ வீடியோவும் இன்று பிப்ரவரி 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

முன்னதாக முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக தற்போது காஷ்மீருக்கு சென்றுள்ள தளபதி 67 படக்குழுவினர் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தளபதி 67 படக்குழுவினர் தனி விமானத்தில் ஷூட்டிங்குக்கு கிளம்பிய வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அட்டகாசமான அந்த வீடியோ இதோ…
 

#Thalapathy67 KASHMIR SCHEDULE BEGINS#Thalapathy @actorvijay @trishtrashers @anirudhofficial @PriyaAnand @duttsanjay @Dir_Lokesh @7screenstudio @akarjunofficial pic.twitter.com/7iWp2EZFXF

— Jagadish (@Jagadishbliss) February 3, 2023

விஜய் - லோகேஷ் கனகராஜன் அதிரடியான தளபதி 67... மிரட்டலான டைட்டில் அறிவிப்பு போஸ்டர் உருவான விதம் இதோ!
சினிமா

விஜய் - லோகேஷ் கனகராஜன் அதிரடியான தளபதி 67... மிரட்டலான டைட்டில் அறிவிப்பு போஸ்டர் உருவான விதம் இதோ!

ராஜா ராணி 2 நடிகருக்கும் பிரபல சீரியல் நடிகைக்கும் விரைவில் டும் டும் டும்... குவியும் வாழ்த்துக்கள்! விவரம் உள்ளே
சினிமா

ராஜா ராணி 2 நடிகருக்கும் பிரபல சீரியல் நடிகைக்கும் விரைவில் டும் டும் டும்... குவியும் வாழ்த்துக்கள்! விவரம் உள்ளே

விஜய் உடன் மாநகரம் & மைக்கேல் நடிகர் சந்தீப் கிஷன்... ட்ரெண்டாகும் தளபதி 67 படப்பூஜையின் புதிய புகைப்படம்!
சினிமா

விஜய் உடன் மாநகரம் & மைக்கேல் நடிகர் சந்தீப் கிஷன்... ட்ரெண்டாகும் தளபதி 67 படப்பூஜையின் புதிய புகைப்படம்!