சிலம்பரசன்TRன் பிறந்தநாள் பரிசாக வந்த பத்து தல படத்தின் நம்ம சத்தம் பாடல்… அசத்தலான வீடியோ இதோ!

பத்து தல படத்தின் நம்ம சத்தம் பாடல் வெளியீடு,silambarasan tr in pathu thala movie first single namma satham out now | Galatta

தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன்.TR இன்று பிப்ரவரி 3ஆம் தேதி தனது 39 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நடிகர் சிலம்பரசன்.TR அவர்களுக்கு கலாட்டா குழுமம் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

கடைசியாக வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் அசத்தலான திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. அந்த வகையில் அடுத்ததாக இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகும் கொரோனா குமார் படத்தில் சிலம்பரசன்.TR நடிக்க இருக்கிறார். 

முன்னதாக AGR எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் சிலம்பரசன்.TR நடித்துள்ள பத்து தல திரைப்படம் வருகிற மார்ச் 30 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து பத்து தல திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மேலும் பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கும் பத்து தல படத்திற்கு ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சிலம்பரசன்.TRன் பிறந்த நாளான இன்று பிப்ரவரி 3ஆம் தேதி பிறந்த நாள் பரிசாக பத்து தல திரைப்படத்தின் முதல் பாடலாக நம்ம சத்தம் பாடல் வெளியானது. அட்டகாசமான அந்த பாடலின் லிரிக் வீடியோ இதோ…
 

தளபதி 67 பட டைட்டில் LCU-வை உறுதி செய்யுமா..? அறிவிப்பு போஸ்டர்களில் ஒத்துபோகும் CODE:RED - மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
சினிமா ஸ்பெஷல்ஸ்

தளபதி 67 பட டைட்டில் LCU-வை உறுதி செய்யுமா..? அறிவிப்பு போஸ்டர்களில் ஒத்துபோகும் CODE:RED - மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

விஜய் - லோகேஷ் கனகராஜன் அதிரடியான தளபதி 67... மிரட்டலான டைட்டில் அறிவிப்பு போஸ்டர் உருவான விதம் இதோ!
சினிமா

விஜய் - லோகேஷ் கனகராஜன் அதிரடியான தளபதி 67... மிரட்டலான டைட்டில் அறிவிப்பு போஸ்டர் உருவான விதம் இதோ!

ராஜா ராணி 2 நடிகருக்கும் பிரபல சீரியல் நடிகைக்கும் விரைவில் டும் டும் டும்... குவியும் வாழ்த்துக்கள்! விவரம் உள்ளே
சினிமா

ராஜா ராணி 2 நடிகருக்கும் பிரபல சீரியல் நடிகைக்கும் விரைவில் டும் டும் டும்... குவியும் வாழ்த்துக்கள்! விவரம் உள்ளே