ரசிகர்கள் எதிர்பார்த்த அஜித்குமாரின் துணிவு பட வேற லெவல் அறிவிப்பு... கவனம் ஈர்க்கும் கலக்கலான ஸ்பெஷல் ப்ரோமோ இதோ!

அஜித்குமாரின் துணிவு படம் பிப்ரவரி 8-ம் தேதி நெட்ஃபிலிக்ஸில் வெளியீடு,ajith kumar in thunivu releasing in netflix from february 8th | Galatta

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக திகழும் அஜித் குமாரின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் வெளிவந்துள்ள துணிவு திரைப்படம் ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ளது.

முன்னணி தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களின் தயாரிப்பில் பக்கா அதிரடி ஆக்சன் படமாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக கொண்டாடப்பட்டு வசூல் வேட்டையாடியது. 

அஜித் குமாருடன் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா,  பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், பால சரவணன், GM.சுந்தர், சிபி புவனச்சந்திரன், ஜான் கொக்கென், விஸ்வநாத் உத்தப்பா, பிக் பாஸ் பாவணி, தர்ஷன், அமீர் மற்றும் மமதி சாரி உட்பட பலர் முக்கிய வேடங்களில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

நீரவ் ஷா ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ள துணிவு திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நடன இயக்குனராக கல்யாண் மாஸ்டர் பணியாற்றியுள்ள துணிவு படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக சுப்ரீம் சுந்தர் பணியாற்றியுள்ளார். திரையரங்குகளில் கொண்டாடப்பட்ட துணிவு திரைப்படத்தின் OTT ரிலீஸுக்காகவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.
 
இந்த நிலையில் வருகிற பிப்ரவரி 8ம் தேதி நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் மற்றும் நடிகர் பக்ஸ் ஆகியோர் அவர்களது கதாபாத்திரத்திலேயே நடித்துள்ள ஸ்பெஷல் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோ இதோ…
 

புகழ்மிக்க பழம்பெறும் இயக்குனரும் நடிகருமான K.விஸ்வநாத் காலமானார்... சோகத்தில் திரையுலகம்!
சினிமா

புகழ்மிக்க பழம்பெறும் இயக்குனரும் நடிகருமான K.விஸ்வநாத் காலமானார்... சோகத்தில் திரையுலகம்!

தளபதி 67 பட டைட்டில் LCU-வை உறுதி செய்யுமா..? அறிவிப்பு போஸ்டர்களில் ஒத்துபோகும் CODE:RED - மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
சினிமா ஸ்பெஷல்ஸ்

தளபதி 67 பட டைட்டில் LCU-வை உறுதி செய்யுமா..? அறிவிப்பு போஸ்டர்களில் ஒத்துபோகும் CODE:RED - மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

விஜய் - லோகேஷ் கனகராஜன் அதிரடியான தளபதி 67... மிரட்டலான டைட்டில் அறிவிப்பு போஸ்டர் உருவான விதம் இதோ!
சினிமா

விஜய் - லோகேஷ் கனகராஜன் அதிரடியான தளபதி 67... மிரட்டலான டைட்டில் அறிவிப்பு போஸ்டர் உருவான விதம் இதோ!