என்ன நடந்தாலும் சரி... மகன்கள் மீதான தனுஷின் பாசம் குறித்து மனம் திறந்த வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லுரி! வைரல் வீடியோ

தன் மகன்கள் மீதான தனுஷின் பாசம் குறித்து பேசிய வெங்கி அட்லுரி,vaathi director venky atluri opens about dhanush love on his sons | Galatta

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நாயகர்களில் ஒருவராகவும் இந்திய சினிமாவில் இன்றியமையாத நடிகர்களில் ஒருவராகவும் திகழும் நடிகர் தனுஷ் முதல் முறை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கி அட்லுரி நடித்துள்ள வாத்தி (SIR) திரைப்படம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடும் வாத்தி திரைப்படம் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. 

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்க, தனுஷுடன் இணைந்து சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் வாத்தி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். J.யுவராஜ் ஒளிப்பதிவில், நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய, வாத்தி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இதனிடையே நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய இயக்குனர் வெங்கி அட்லுரி வாத்தி திரைப்படம் குறித்தும் நடிகர் தனுஷுடன் இணைந்து பணியாற்றியது குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் "வாத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பும் சமயத்தில் தான், அவரது தனிப்பட்ட வாழ்விலும் (அவரது விவாகரத்து) சினிமா வாழ்விலும் பல ஏற்ற இறக்கங்கள் நடந்தன. ஹாலிவுட் திரைப்படத்திலும், பாலிவுட் திரைப்படத்திலும் மற்றும் சில முக்கிய படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். இவை அனைத்திற்கும் இடையே வாத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அவர் எப்படி இருப்பார்?" என கேட்டபோது, 

“எங்களுக்கிடையே மிக நீளமான பயணம் இருந்தது. 2021 ஜூன் மாதத்தில் அவருக்கு கதை சொன்னேன். எப்போது இருந்து இப்போது வரை அவரை நெருக்கமாக பார்க்கிறேன். அவர் இரண்டு விஷயங்களை தான் காதலிக்கிறார். ஒன்று சினிமா மற்றொன்று அவரது மகன்கள். யாத்ரா மற்றும் லிங்கா. எனவே என்ன நடந்தாலும் சரி அவரது தலைக்குள் என்ன இருந்தாலும் அவையாவும் இந்த இரண்டு விஷயங்களை பாதிக்க அவர் விட்டதில்லை. அதை அவர் காட்டிக் கொள்ள மாட்டார். ஆனால் மிகவும் முனைப்போடு இருப்பார்.” என இயக்குனர் வெங்கி அட்லுரி தெரிவித்துள்ளார். அந்த முழு பேட்டி இதோ…
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தின் ஆக்சன் டீம்... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தின் ஆக்சன் டீம்... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!

பத்து தல டைட்டில் ஏன்..? உண்மையை உடைத்து சுவாரஸ்யமாக பதிலளித்த இயக்குனர் ஒபெலி N கிருஷ்ணா! வீடியோ இதோ
சினிமா

பத்து தல டைட்டில் ஏன்..? உண்மையை உடைத்து சுவாரஸ்யமாக பதிலளித்த இயக்குனர் ஒபெலி N கிருஷ்ணா! வீடியோ இதோ

இசைஞானியுடன் கைக்கோர்த்த தனுஷின் மயக்கும் குரலில் 'ஒன்னோட நடந்தா!' - வெற்றிமாறனின் விடுதலை பட முதல் பாடல் இதோ!
சினிமா

இசைஞானியுடன் கைக்கோர்த்த தனுஷின் மயக்கும் குரலில் 'ஒன்னோட நடந்தா!' - வெற்றிமாறனின் விடுதலை பட முதல் பாடல் இதோ!