தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திர நாயகனாகவும் பாக்ஸ் ஆஃபீஸ் சக்கரவர்த்தியாகவும் திகழும் தளபதி விஜய் அடுத்ததாக முதல் முறை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் #தளபதி66 படத்தில் நடிக்கிறார். முன்னணி தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் #தளபதி66 திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

சமீபத்தில் பூஜையுடன் #தளபதி66 படப்பிடிப்பு தொடங்கியது.தளபதி விஜயுடன் இணைந்து நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், இளைய திலகம் பிரபு, ஷியாம், சங்கீதா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகிபாபு, பிக்பாஸ் சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தளபதி66 திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.

முன்னதாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் தமிழ் புத்தாண்டு வெளியீடாக கடந்த ஏப்ரல் 13ம் தேதி உலகமெங்கும் ரிலீஸானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய்க்கே உரித்தான ஸ்டைலான ஆக்ஷனில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளிவந்த அரபிக் குத்து பாடல் லிரிக் வீடியோ 400 மில்லியன் பார்வையாளர்கள் எனும் இமாலய இலக்கை நோக்கி செல்லும் நிலையில் நேற்று (மே-10) அரபிக் குத்து வீடியோ பாடல் வீடியோ வெளியானது. வெளியான முதல் நாளிலேயே 1 கோடி (10 மில்லியன்) பார்வையாளர்களை கடந்து சாதனைப்படைத்துள்ளது. அட்டகாசமான அரபிக் குத்து வீடியோ பாடல் இதோ…