'தளபதி விஜயின் லியோ பட ஃபர்ஸ்ட் லுக்கில் இதெல்லாம் கவனித்தீர்களா?'- ஆர்வத்தை தூண்டும் HIDDEN DETAILS இதோ!

தளபதி விஜயின் லியோ பட ஃபர்ஸ்ட் லுக்கில் உள்ள Hidden Details,thalapathy vijay leo movie first look poster hidden details | Galatta

தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகராக திகழும் தளபதி விஜய் அவர்கள் இன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. முன்னதாக தளபதி விஜய் பிறந்தநாள் பரிசாக இன்று ஜூன் 22 ஆம் தேதி மாலை 6.30 மணி அளவில் லியோ திரைப்படத்தின் முதல் பாடலான “நா ரெடி” எனும் பாடல் வெளிவர இருக்கிறது. அதற்கு முன்பே சர்ப்ரைசாக நள்ளிரவு 12.00 மணி அளவில் லியோ திரைப்படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த லியோ திரைப்படத்தில் திரிஷா நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் உடன் இணைந்து கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலிகான், மறைந்த நடிகர் மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் லியோ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்க, அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது தளபதி விஜயின் மிரட்டலான லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆர்வத்தை தூண்டும் HIDDEN DETAILS ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. அதில் முதலாவதாக,

கழுதைப் புலி:

சினிமாவைப் பொறுத்த வரைக்கும் ஒவ்வொரு விலங்குகளும் ஒவ்வொரு வகையில் அங்கீகரிக்கப்படுகின்றன. அந்த வகையில் கழுதைப்புலி மட்டும் எப்போதும் வில்லத்துவமான விலங்காகவே அனுசரிக்கப்படுகிறது. ஹாலிவுட்பில் கூட தி லயன் கிங் மற்றும் தி ஜங்கிள் புக் உள்ளிட்ட படங்களில் புலி மற்றும் சிங்கம் போன்ற விலங்குகளுக்கு கிடைக்கும் மரியாதை போல் அல்லாமல் எதிர்மறையான கதாபாத்திரங்களிலேயே பெரும்பாலும் கழுதைப்புலி வைக்கப்படுகிறது.

jayam ravi emotional statement about 20 years of his cinema journey ஆனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படத்தில் கதையின் நாயகனின் கதாபாத்திரத்தோடு கழுதைப்புலி இருப்பது போல இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. சினிமாவை விட்டு விலகி கழுதைப்புலி என்ற விலங்கை தனிப்பட்ட முறையில் அதன் இயல்போடு பார்த்தால் கழுதைப்புலிகள் கூட்டமாக வாழும் தன்மை கொண்டது. எந்த மாதிரியான சூழ்நிலைகளாக இருந்தாலும் அதை எதிர் கொண்டு சமாளிக்கும் வல்லமை கொண்டது. அந்த வகையில் தளபதி விஜயின் கதாபாத்திரத்தை குறிக்கும் வகையிலேயே கழுதைப்புலியை குறிப்பிடுவதாக தெரிகிறது. ஏற்கனவே விக்ரம் திரைப்படத்தில் இது மாதிரி விலங்குகளை குறிப்பிட்டு லோகேஷ் கங்கராஜ் தன்பானையில் ஒரு சம்பவம் செய்திருப்பதால் லியோ திரைப்படம் LCUவில் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது.

ரத்தத்தில் நனைந்த லியோ டைட்டில்:

லியோ திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட போது தங்க நிற கவர் கொண்ட சாக்லேட் போன்ற அந்த டைட்டிலில் பிளடி ஸ்வீட் என்ற வாசகம் வைக்கப்பட்டிருந்தது.

jayam ravi emotional statement about 20 years of his cinema journeyமுன்னதாக டைட்டில் அறிவிப்புக்கு முன்பு வெளிவந்த ஒரு ஸ்பெஷல் போஸ்டர் முழுக்க முழுக்க ரத்தத்தில் வரையப்பட்டது போன்ற இருந்தது. இந்த நிலையில் தற்போது வெளி வந்திருக்கும் லியோ திரைப்படத்தின் புதிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நீயோ படத்தின் டைட்டில் ரத்தத்தில் நனைத்து வைக்கப்பட்டது போல் இருக்கிறது.

தளபதி விஜயின் லுக்:

jayam ravi emotional statement about 20 years of his cinema journeyமுன்னதாக காஷ்மீர் படப்பிடிப்பில் இருக்கும் போது இன்ஸ்டாகிராமில் வெளியான தளபதி விஜயின் முதல் புகைப்படத்தில் உள்ள அதே உடையில் பனிப்பிரதேசத்தில் கையில் சமட்டியோடு இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே லியோ அறிவிப்பு ப்ரோமோவில் பார்த்த லுக் தான். ஆனால் சமீபத்தில் நா ரெடி அறிவிப்பு போஸ்டரில் வந்த மற்றொரு அதிரடியான லுக் விஜயின் இளம் மற்றும் கொஞ்சம் வயதான ஒரு கதாபாத்திரம் இரண்டு சாயல்களை காட்டும் விதமாக இருக்கிறது.

கை:

jayam ravi emotional statement about 20 years of his cinema journeyதளபதி விஜயின் கையில் ரத்தம் திறக்கும் வகையில் இருக்கும் கத்தியும் தெறிக்கும் ரத்தமும் உடைந்து தெறிக்கும் பற்களும் என எல்லாமே மிரட்டலாக இருக்க மறுபுறம் ஆதரவு அல்லது உதவி கூறும் வகையில் ஒரு கையும் காட்டப்படுகிறது.

இப்படியாக தளபதி விஜயின் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிறுசிறு நுணுக்கங்களையும் HIDDEN DETAILSகளாக ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
 

#LeoFirstLook is here! Happy Birthday @actorvijay anna!
Elated to join hands with you again na! Have a blast! 🤜🤛❤️#HBDThalapathyVIJAY #Leo 🔥🧊 pic.twitter.com/wvsWAHbGb7

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 21, 2023

'என் சுவர்களும் முகமூடிகளும் தூசுகளாக நொறுங்கின..!'- சீயான் விக்ரமின் தங்கலான் படப்பிடிப்பை முடித்த பார்வதியின் வைரலாகும் பதிவு உள்ளே!
சினிமா

'என் சுவர்களும் முகமூடிகளும் தூசுகளாக நொறுங்கின..!'- சீயான் விக்ரமின் தங்கலான் படப்பிடிப்பை முடித்த பார்வதியின் வைரலாகும் பதிவு உள்ளே!

'ஸ்டன்ட்ஸ் பலவீனமானவர்களுக்கானது அல்ல!'- ஷூட்டிங்கில் காயமடைந்த மாநாடு பட நாயகி கல்யாணி பிரியதர்ஷன்! புகைப்படங்கள் உள்ளே
சினிமா

'ஸ்டன்ட்ஸ் பலவீனமானவர்களுக்கானது அல்ல!'- ஷூட்டிங்கில் காயமடைந்த மாநாடு பட நாயகி கல்யாணி பிரியதர்ஷன்! புகைப்படங்கள் உள்ளே

தளபதி விஜய் பிறந்தநாளில் காத்திருக்கும் பக்கா மாஸ் சர்ப்ரைஸ்... லோகேஷ் கனகராஜ் கொடுத்த பிளடி ஸ்வீட்டான அறிவிப்பு இதோ!
சினிமா

தளபதி விஜய் பிறந்தநாளில் காத்திருக்கும் பக்கா மாஸ் சர்ப்ரைஸ்... லோகேஷ் கனகராஜ் கொடுத்த பிளடி ஸ்வீட்டான அறிவிப்பு இதோ!