ஜாலியா ஒரு ரோல்ஸ் ராய்ஸ் Ride...ட்ரெண்டாகும் தளபதி விஜயின் வீடியோ !
By Aravind Selvam | Galatta | April 11, 2022 15:29 PM IST
தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்திகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் தயாராகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீசாக தயாராகி வருகிறது.சன் பிக்சர்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.
நெல்சன் திலீப்குமார் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.பூஜா ஹெக்டே இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் அசத்தலான டீஸர் சமீபத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.
எப்போதும் விஜய் பட ரிலீசுக்கு முன் பிரம்மாண்டமாக ஒரு இசை வெளியீட்டு விழா நடைபெறும் அதில் விஜயின் பேச்சும் ரசிகர்களிடம் வெகுவாக வரவேற்பை பெரும் , சில காரணங்களால் பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை.இதனால் விஜயின் பிரத்யேக பேட்டி ஒன்றை சன் டிவி ஒளிபரப்பவுள்ளனர்.கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து விஜய் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இயக்குனர் நெல்சன் தொகுப்பாளராக மாறி கேள்விகளை விஜயிடம் கேட்டுள்ளார்.இந்த நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது.இதில் பல சுவாரசியமான பதில்களை விஜய் பகிர்ந்துகொண்டார்.அதில் விஜய் பீஸ்ட் படக்குழுவுடன் அவரது ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஒரு ரவுண்டு அழைத்து சென்றுள்ளார்.இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.