தமிழ் திரையுலகில் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக திகழும் அருண் விஜய் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக அதிரடி ஆக்ஷன் திரில்லர் திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. முன்னதாக அருண் விஜய் நடிப்பில் அக்னிச்சிறகுகள், பாக்சர் மற்றும் சினம் உள்ளிட்ட திரைப்படங்கள் நிறைவடைந்து விரைவில் ரிலீஸாக உள்ளன.

மேலும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படம் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள பார்டர் திரைப்படம் ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில், மீண்டும் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் புதிய வெப்சீரிஸில் அருண்விஜய் நடித்து வருகிறார். 

இந்த வரிசையில் நடிகர் அருண்விஜய், அவரது மகன் அர்னவ் மற்றும் அவரது தந்தை விஜயகுமார் மூவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ஓ மை டாக். இயக்குனர் சரோ சரவணன் எழுதி இயக்கியுள்ள ஓ மை டாக் திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. மேலும் ஓ மை டாக் படத்தில் நடிகை மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்க, நடிகர் வினய் வில்லனாக நடித்துள்ளார்.

கோபிநாத் ஒளிப்பதிவில் நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ள ஓ மை டாக் திரைப்படம் வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாகிறது. இந்நிலையில் ஓ மை டாக் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்த ஓ மை டாக் படத்தின் ட்ரைலர் இதோ…