தென்னிந்தியத் திரையுலகின் திரையுலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக திகழும் ஆதி நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கிளாப். இசைஞானி இளையராஜா இசையமைக்க, தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ரிலீஸான கிளாப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 

இதனையடுத்து பிரபல தெலுங்கு நடிகர் ராம் போதினேனி கதாநாயகனாக நடிக்கும் தி வாரியர் திரைப்படத்தில் ஆதி மிரட்டலான வில்லனாக நடிக்கிறார். இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகிவரும் தி வாரியர் திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 

இந்த வரிசையில் அடுத்ததாக நடிகர் ஆதி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் பார்ட்னர். ஆதி மற்றும் ஹன்சிகா மோத்வானி இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள பாட்னர் திரைப்படத்தில் யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான்விஜய், ரவி மரியா மற்றும் டைகர் தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் மனோஜ் தாமோதரன் எழுதி இயக்கியுள்ள பாட்னர் படத்தை ROYAL FORTUNA CREATIONS தயாரித்துள்ளது. பாட்னர் படத்திற்கு சபீர் அஹமத் ஒளிப்பதிவில், பிரதீப்.V.ராகவ் படத்தொகுப்பு செய்ய, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.  முன்னதாக சந்தோஷ் தயாநிதி இசையில் சுயாதீன பாடலாக வெளிவந்து ஹிட்டடித்த ராட்டி பாடல் பார்ட்னர் படத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராட்டி பாடல் தற்போது வெளியானது. அந்த பாடல் இதோ…