சிறுமிக்கு மது கொடுத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம்! அரசியல் பிரமுகர் மகன் அதிரடி கைது

சிறுமிக்கு மது கொடுத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம்! அரசியல் பிரமுகர் மகன் அதிரடி கைது - Daily news

பிறந்தநாள் விருந்து ஒன்றில் அரசியல் பிரமுகர் மகனால், 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சமர் கோலி என்பவர், அங்கு கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது மகன் சோஹல், சமீபத்தில் தனது பிறந்த நாள் விழவை நண்பர்களுடன் சேர்ந்து கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார்.

அந்த பிறந்தநாள் விழாவிற்கு, அந்த பகுதியைச் சேர்ந்த 14 வயதான 9 ஆம் வகுப்பு படிக்கும்  சிறுமி ஒருவரும் சென்று உள்ளார். 

இந்த பிறந்தநாள் விழா முடிந்து லேட் நைட்டில், அந்த 14 வயது சிறுமி வீடு திரும்பி இருக்கிறார்.

அப்போது, பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மிக கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதனால், பதறிப்போன அந்த சிறுமியின் உறவினர்கள், அந்த சிறுமியை மீட்டு உடனடியாக அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

அங்கு, அந்த சிறுமிக்கு தீவிரமாக சிகிச்சை அளித்த நிலையில், அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்த, அந்த 14 வயதான பள்ளி சிறுமியின் உடலை, அவரது வீட்டினர் அந்த பகுதியில் அவசரமாக அவரது தகனம் செய்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், அந்த பிறந்த நாள் விழா பற்றி போலீசாருக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து, “அந்த 14 வயது சிறுமி, அந்த பிறந்த நாள் விழாவிற்கு தனியாக சென்றாரா? அல்லது அவரது சக நண்பர்களுடன் சென்றாரா?” என்று,  போலீசார் பல கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

அத்துடன், “பாதிக்கப்பட்ட 14 வயாதான அந்த சிறுமி, மது அருந்தும் படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், ஒரு பெண் மற்றும் அடையாளம் தெரியாத ஆண்களால் அந்த சிறுமி அவரது வீட்டில் இறக்கிவிடப்பட்டதாகவும்” பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் தந்தை போலீசில் புகாராக கூறியிருக்கிறார்.

இதனையடுத்து, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சம்மந்தப்பட்ட சோஹலை, போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

அதன் தொடர்ச்சியாக, சோஹலின் தந்தையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிராம பஞ்சாயத்து உறுப்பினரான சமர் கோலி, தனது குடும்பத்தினருடன் தப்பி ஓடி தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்த சம்பவம் பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment