ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் அடுத்தடுத்து ஜெயம் ரவியின் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன், விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் மற்றும் பிரபுதேவாவின் பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபல கதாநாயகியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் கதாநாயகியாகவும் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் நடிகை நிவேதா பெத்துராஜ் மெண்டல் மதிளோ, சித்ரலஹரி, பிரோச்சேவரேவருற, அல்லு அர்ஜுனின் அள வைகுண்டபுரம்லோ மற்றும் அருண் விஜய்யின் தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக வழிவந்த ரெட் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

அடுத்ததாக, தெலுங்கில் ராணா டகுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து விரைவில் வெளிவரவுள்ள விரட்ட பர்வம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து மீண்டும் தெலுங்கில் நடிகை நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ள பிளடி மேரி திரைப்படம் நேரடியாக aha Original OTT தளத்தில் வருகிற ஏப்ரல் 15-ம் தேதி ரிலீசாகவுள்ளது.

இயக்குனர் சண்டு மொண்டெடி இயக்கியுள்ள பிளடி மேரி திரைப்படத்தை பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. கார்த்திக் கட்டம்னேனி ஒளிப்பதிவில், கால பைரவா இசையமைத்துள்ளார். இந்நிலையில் நிவேதா பெத்துராஜின் பிளடி மேரி திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. விறுவிறுப்பான அந்த ட்ரைலர் இதோ…