தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் தளபதி விஜய்.நாளை இவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இவர் நடிக்கும் தளபதி 65 படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Beast என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.பூஜா ஹெக்டே இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

செம மாஸாக உள்ள இந்த பர்ஸ்ட்லுக் குறித்து பல பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.நடிகரும் இயக்குனர் நெல்சனின் நெருங்கிய நண்பருமான சிவகார்த்திகேயன் இந்த பர்ஸ்ட்லுக் குறித்து ட்வீட் செய்துள்ளார்.தளபதி செம ஸ்டைலாக உள்ளார் என்று அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த சிவகார்த்திகேயன்.

அனிருத் நெல்சன் மற்றும் படக்குழுவினருக்கு படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.குறிப்பாக நெல்சனிடம் அந்த 400 என்று தெரிவித்திருந்தார்.இது என்ன என்று ரசிகர்கள் ஆவலாக யோசித்து வந்தனர்.விஜய் படங்கள் எப்போதும் வசூலில் பட்டையை கிளப்பும் பிகில் படம் 300 , மாஸ்டரும் 300 கோடிக்கு மேல் வசூல் ஆனதை அடுத்து இந்த படம் 400 கோடி வசூல் பெற வேண்டும் என்றும் கூறியிருக்கலாம் என்று தெரிகிறது.