தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் பீஸ்ட்.பெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.சன் பிக்சர்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளளார்.

இந்த படத்தின் முதல் பாடல் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.இதற்கான ப்ரோமோ நேற்று வெளியிடப்பட்டது.இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா படத்தின் மேக்கிங் வீடீயோவை போல இந்த படத்திலும் நெல்சன் அனிருத் சிவகார்த்திகேயன் சேர்ந்து ஒரு ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.

இந்த ப்ரோமோவில் மேலும் ஒரு ஸ்பெஷல் இணைப்பாக தளபதி விஜய் போன் கால் மூலம் இணைகிறார்.அனிருத்தின் வித்தியாசமான இந்த அரபிக் குத்து பாடல் ப்ரோமோ ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது..சிவகார்த்திகேயன் தமிழுடன் தன்னுடைய அரபிக் வார்த்தைளை இந்த பாடலில் இணைத்துள்ளார்.

இவர்களது இந்த ஜாலி ப்ரோமோ ஒரு புறம் இருந்தாலும் ரசிகர்களின் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு வார்த்தை ஹலமத்தி ஹபிபோ.என்ன இது வார்த்தை என்று ரசிகர்கள் ஆராய்ந்து வரும் வேளையில் அந்த வார்த்தைக்கான அர்த்தம் இதோ ஹலமத்தி ஹபிபோ என்றால் நான் என் காதலியை பற்றி கனவு கண்டேன் என்பது தான் அது.

எனவே இது விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து ஆடும் ஒரு அரபிக் ஸ்டைல் அசத்தல் பாடலாக இருக்கும் என தெரிகிறது.மேலும் பிரபல நடன இயக்குனர் ஜானி புட்ட பொம்மாவுக்கு டஃப் தர பீஸ்ட்டில் பாடல் வருகிறது என்றும் கூறியிருக்கிறார்,அந்த பாடல் இந்த பாடலாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.அனிருத் குரலில் விஜயின் துள்ளலான நடன அசைவுகளுடன் இந்த பாடல் ஒரு செம விருந்தாக அமையும் என தெரிகிறது.

thalapathy vijay beast arabic kuthu meaning of halamithi habibo revealed