தெலுங்கில் மிக பிரபலமான மேடம் சார் மேடம் அந்தே எனும் வெப்சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம் அடைந்தவர் நடிகை காய்த்ரி டோலி டி குரூஸ்.. மேலும் பல தெலுங்கு திரைப்படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் தெலுங்கு மெகா தொடர்களிலும் காயத்ரி முக்கிய வேடங்களிலும் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பல படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வந்த நடிகை காயத்ரி டி குரூஸ் கார் விபத்தில் உயிரிழந்தார். கடந்த மார்ச் 18ஆம் தேதி தனது தோழியுடன் ஹோலிப் பண்டிகையை கொண்டாடி விட்டு வீடு திரும்பிய காயத்ரியின் கார் அதிவேகமாக வந்ததில் சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

ஹைதராபாத்தின் காச்சிவாலி பகுதியில் நடைபெற்ற இந்த கோர விபத்தில் நடிகை காயத்ரி உடன் பயணித்த அவரது தோழி ரத்தோட் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே நடிகை காயத்ரி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. வெறும் 26 வயதே ஆன நடிகை காயத்ரியின் மறைவு தெலுங்கு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை காயத்ரி காயத்ரி டி குரூஸ் மறைவுக்கு கலாட்டா குழுமம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மிக இளம் வயதில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த நடிகை காயத்ரி டோலி டி குரூஸுக்கு தெலுங்கு திரையுலகமும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.