புட்பால் போட்டியின் போது அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கேலரி ஒன்று லைட் கம்பத்துடன் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 200 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உள்ளனர். 

கேரளா மாநிலத்தில் நடைபெற்ற புட்பால் போட்டியின் போது தான், இப்படி ஒரு கோர விபத்து நடந்திருக்கிறது. 

அதாவது, கேரளா மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் காளி காவு என்னும் பகுதியில் செயல்பட்டு வரும் பூங்கோடு எல்.பி. பள்ளி மைதானத்தில்
புட்பால் போட்டி நடைபெற்று உள்ளது. 

அதுவும், அகில இந்திய செவன்ஸ் கால்பந்து போட்டியான டோர்ன மெண்டின் போட்டியின் இறுதி போட்டி நேற்று இரவு நடைபெற்று உள்ளது.

இந்த புட்பால் போட்டிக்காக அந்த மைதானத்தின் தாற்காலிக பார்வையாளர் கூடம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. 

அத்துடன், இந்த புட்பால் போட்டியானது இரவு நேரத்தில் நடைபெற்றதால், அந்த தற்காலிக கேலரியை சுற்றிலும் அதிகம் வெளிச்சம் தரும் வகையிலான லைட் கம்பங்களும் கட்டப்பட்டு இருந்தன.

இந்த கேலரி மூங்கில் மற்றும் பாக்குமரம் போன்றவற்றால் தாற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்தது.  

அப்போது, இந்த போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது, இரவு 9.30 மணி அளவில் தாற்காலிக கேலரியில் அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்களை விட, மிக அதிக அளவிலான பார்வையாளர்கள் அந்த கேலரியில் அமர்ந்து இந்த புட்பால் போட்டியை பா்த்து ரசித்துக்கொண்டிருந்தனர்.

அதாவது, புட்பால் போட்டியை நடத்திய நிர்வாகிகளும், போட்டியை காண வந்த ரசிகர்கள் அனைவருக்குமே தலா 100 ரூபாய் டிக்கெட் வழங்கி போட்டியை காண உள்ளே அனுமதித்தனர். அப்போது, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவில் அந்த கேலரியில் பார்வையாளர்களை அவர்கள் அமர்ந்து பார்க்கும் படி, அந்த கேலரியில் அனுமதித்து உள்ளனர்.

அப்போது, அதிகபடியான ஆட்களை அந்த கேலரியில் அனுமதித்ததால், அந்த தற்காலிக கேலரியானது அதிகமான பாரத்தை தாங்காமல், அப்படியே சீட்டுக் கட்டுக்களைப் போல் சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டு உள்ளது. 

குறிப்பாக, இந்த கேலிரி சரிந்து விழும் போது, அருகில் இருந்த ஒரு தற்காலிக லைட் கம்பத்தின் மீதும் விழுந்ததால், அந்த லைட் கம்பமும் கீழே இழுந்தது. 

இப்படியாக, கேலரி மற்றும் லைட் கம்பம் இரண்டும் கீழே விழுந்ததில், அங்கிருந்த சுமுார் 250 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் படுகாயங்களுடன் உயிர் தப்பி உள்ளனர்.

இதனையடுத்து, இந்த விபத்தில் சிக்கிய சுமார் 250 க்கும் மேற்பட்டவர்களை அருகில் உள்ள வண்டூர், நிலம்பூர், மஞ்சேரி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளன்ர். 

இதில், 15 க்கும் மேற்பட்டோர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது என்றும், இதில் 3 பேர் படுகாயத்துடன் தீவிரமாக சிகிச்சை பெற்று வருவதகவும் கூறப்படுகிறது. எனினும், யாருக்கும் எந்த வித உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போட்டியை நடத்திய நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து உள்ள போலீசார், தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.