தெலுங்கு திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் கடைசியாக ரிலீஸான சரிலேறு நீக்கெவரு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக இயக்குனர் த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் #SSMB28 திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு #SSMB28  திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான கீதா கோவிந்தம் திரைப்படத்தின் இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள திரைப்படம் சர்க்காரு வாரி பாட்டா.

மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ்  மற்றும் G.மகேஷ் பாபு என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள சர்க்காரு வாரி பாட்டா படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, வென்னலா கிஷோர், சுப்பராஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மதி ஒளிப்பதிவு செய்துள்ள சர்க்காரு வாரி பாட்டா படத்திற்கு தமன்.S இசையமைத்துள்ளார்.

வருகிற மே 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள சர்க்காரு வாரி பாட்டா திரைப்படத்தில் இருந்து முன்னதாக வெளிவந்த கலாவதி பாடல் ஹிட்டடித்த நிலையில் அடுத்த பாடலாக பென்னி பாடல் வீடியோ தற்போது வெளியானது . இந்த பாடல் மியூசிக் வீடியோவில் முதல்முறையாக  மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா கட்டமனேனி நடனமாடியுள்ளார். சர்க்காரு வாரி பாட்டா படத்தின் அசத்தலான பென்னி பாடல் வீடியோ இதோ…