தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் நடிப்பில் கடைசியாக கடந்த மாதம் ரிலீஸான திரைப்படம் வலிமை. இதனையடுத்து மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் #AK61 திரைப்படத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானது.

இந்த #AK61 திரைப்படத்தையும் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களை இயக்கிய இயக்குனர் H.வினோத் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித்குமார் நடிக்கும் #AK62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

வேதாளம் & விவேகம் படங்களை தொடர்ந்து அஜித்தின் #AK62 திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் குமாரின் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.

காவல்துறை அதிகாரியாக அஜித் குமார் நடித்த அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்த வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 25 நாட்களை கடந்துள்ள நிலையில் வருகிற மார்ச் 25ஆம் தேதி பிரபல OTT தளமான ZEE5 தளத்தில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ajith kumar in valimai movie to stream on zee 5 ott platform from march 25 h vinoth