சின்னத்திரையின் வாயிலாக தமிழக மக்களிடையே பிரபலமடைந்து தனது கடின உழைப்பால் வெள்ளித்திரையிலும் நடிகராக களமிறங்கி தற்போது தமிழ் சினிமாவின் இன்றியமையாத ஹீரோவாக வளர்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவான ப்ரின்ஸ் திரைப்படம் கடந்த தீபாவளி வெளியீடாக ரிலீசானது.

முன்னதாக இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சைன்ஸ் ஃபிக்ஷன் காமெடி திரைப்படமான அயலான் திரைப்படத்தின் இறுதிக்கட்ட VFX பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பிற்கும் அயலான் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்த வரிசையில் அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இதனிடையே மண்டேலா திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் மாவீரன் படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.

இந்நிலையில் மாவீரன் திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சுனில், கார்த்தி நடிப்பில் தயாராகும் புதிய படமான ஜப்பான் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

We are glad to have @Mee_Sunil onboard! 💐 #Maaveeran@Siva_Kartikeyan @AditiShankarofl @DirectorMysskin @madonneashwin @iamarunviswa @vidhu_ayyanna @bharathsankar12 @philoedit @LokeshJey @DoneChannel1 pic.twitter.com/ey2wfo2fzU

— Shanthi Talkies (@ShanthiTalkies) November 8, 2022