தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது வி ஹவுஸ் ப்ரோடக்ஷன் சார்பில் தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டில்(2021) சிலம்பரசன்.TR நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான மாநாடு திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரித்திருந்தார்.

இதனை அடுத்து இந்த ஆண்டில் (2022) தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் த்ரில்லர் திரைப்படமாக தயாரான ஜீவி-2 திரைப்படம் நேரடியாக Aha தமிழ் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் இணைந்து நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதனிடையே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் அடுத்த படைப்பாக தயாராகி வருகிறது ராஜாகிளி திரைப்படம். ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியான சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா இருவரும் சாட்டை, அப்பா மற்றும் வினோதய சித்தம் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து ராஜாகிளி திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை தம்பி ராமையா அவர்களின் மகனும் பிரபல நடிகருமான உமாபதி ராமையா இயக்கியுள்ளார்.

நடிகர் தம்பி ராமையா கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்துள்ள ராஜாகிளி படத்திற்கு S.கோபிநாத் மற்றும் கேதார்நாத் இணைந்து ஒளிப்பதிவு செய்ய, சுதர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்நிலையில் ராஜாகிளி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…


 

அடுத்த நிஜம்…வெல்வோம்..#Rajakili @umapathyramaiah Directorial@sureshkamatchi #ThambiRamaiah @thondankani @gopinath_dop @jiddukedar @vairabalan @Veerasamar @silvastunt@iamSandy_Off @iambababaskar @navadeviRK @editorsudharsan @johnmediamanagr @Vetrikumaran7 pic.twitter.com/1txhA5GDbx

— P.samuthirakani (@thondankani) November 8, 2022