“திரைப்படங்கள் இனி 8 வாரங்களுக்கு பின்பு தான் ஒடிடியில் வெளியிட வேண்டும்.” திரையரங்க உரிமையாளர்கள் தீர்மானம்.. விவரம் உள்ளே..

தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் விவரம் உள்ளே - Theatre owner association new rule for producer | Galatta

சமீப காலமாக ஒடிடி நுகர்வோர் எண்ணிக்கை அதிகமானதால் திரையரங்க உரிமையாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றன என்ற நிகழ்வு பரவலாக திரைத்துறையில் அதிகமாகி கொண்டு வருகிறது. மேலும் திரையரங்குகளுக்கு வெளியாகும் முன்பே ஒடிடியில் விளம்பரம் செய்வது. வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் போதே ஒடிடியில் வெளியிடுவது போன்ற விஷயங்கள் நடந்தேறி வருகிறது. உதாரணமாக மலையாள திரையுலகில் மிகப்பெரிய ஹிட் அடித்து வசூலை வாரி வழங்கிய டோவினோ தாமஸின் 2018 பட திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும்போதே ஒடிடியில் வெளியான நிகழ்வு நடந்தேறியது, இதனை கண்டித்து அந்த மாநில திரையரங்க உரிமையாளர்கள் ஒரு நாள் திரையரங்குகளை மூடி கண்டனங்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரொனா தொற்றுக்கு பின் ஒடிடி தளங்களின் வளர்ச்சி மக்களிடையே அத்யாவசியங்களில் ஒன்றாகி போனது.  இது தொடர்பாக பல ஆலோசனைகள் நடைபெற்று தற்போது திரையரங்க உரிமையாளர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.  அந்த நிறைவேற்றப் பட்ட கோரிக்கை படிவத்தில் தயாரிப்பாளருக்கான வேண்டுகோள் மற்றும் தமிழக அரசிடம் கோரிக்கை என இரு பிரிவுகளாக வகுத்து அதன்படி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

அந்த தீர்மானத்தில். புதிய திரைப்படங்கள் வெளியாகி 8 வாரங்கள் பின்பே ஒடிடியில் திரையிட வேண்டும் என்றும் 4 வாரம் திரையரங்குகளில் ஓடிய பின்பே அதனை விளம்பர செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து விளம்பர போஸ்டர்களுக்கான வரி 1% நீக்க வேண்டும் என்றும் புதிய திரைப்படங்களுக்கு அதிகப் பட்சமாக 60% தான் பங்கு தொகையாக கேட்க வேண்டும்.  திரையரங்குகளில் திரையிட தயாரிக்கப்பட்ட படங்களை ஓடிடியில் திரையிடும்போது அதில்வரும் வருமானத்தில் ஒரு பங்கு திரையரங்குகளுக்கு அளிக்க வேண்டும். என்று தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது திரையரங்க உரிமையாளர் சங்கம்.

அதே தீர்மான கடிதத்தில் அரசிடம் கேட்டுள்ள கோரிக்கைகளில், திரையரங்குகளுக்கு பராமரிப்பு கட்டணம் மற்ற மாநிலங்களில் உள்ளது போல் இங்கேயும் வசூலிக்க அனுமதி வேண்டும் என்றும் திரையரங்குகள் வர்த்தக சம்பதமான நிகழ்சிகளை நடத்திக் கொள்ள அனுமதியளிக்க வேண்டும், மேலும் மின்சாரக் கட்டணங்கள், சொத்து  ஆகியவைகள் திரையரங்குகளுக்கி குறைத்து வசூலிக்க ஆவணம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஏற்கெனவே திரையரங்க உரிமையாளர் சங்கம்  கொடுத்துள்ள கோரிக்கைகளை அரசு மறுபரிசீலனை செய்து விரைவில் அனுமதி அளிக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கைகளாக திரையரங்க உரிமையாளர் சங்கம் தீர்மானங்களாக நிறைவேற்றியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கைகள் தற்போது ரசிகர்களிடையே வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் திரையுலகினராலும் விவாத பொருளாக மாறியுள்ளது. விரைவில் இது தொடர்பாக எழும் தீர்வுகள் வெளியாகும் என்று எதிர்பார்ப்பப் படுகிறது.

 

“உழைப்பாளர்களுக்காக ஓங்கி குரல் கொடுக்கும் திரைப்படம் அநீதி..” இயக்குனர் ஷங்கர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ உள்ளே..
சினிமா

“உழைப்பாளர்களுக்காக ஓங்கி குரல் கொடுக்கும் திரைப்படம் அநீதி..” இயக்குனர் ஷங்கர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ உள்ளே..

தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிரான வழக்கு.. சென்னை நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!
சினிமா

தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிரான வழக்கு.. சென்னை நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

ஆக்ஷன் காட்சிகளை அள்ளி வழங்கியிருக்கும் அட்லி.. – ஷாருக் கானின் ‘ஜவான்’ சிறப்பு முன்னோட்டத்தில் சுவாரஸ்யம் கூட்டும் 6 சிறந்த தருணங்கள்..
சினிமா ஸ்பெஷல்ஸ்

ஆக்ஷன் காட்சிகளை அள்ளி வழங்கியிருக்கும் அட்லி.. – ஷாருக் கானின் ‘ஜவான்’ சிறப்பு முன்னோட்டத்தில் சுவாரஸ்யம் கூட்டும் 6 சிறந்த தருணங்கள்..