மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மோகன்லால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஆராட்டு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து மோகன்லால் கதாநாயகனாக நடித்திருக்கும் மான்ஸ்டர் போலி டாக்டரை படங்கள் அடுத்தடுத்து விரைவில் திரைக்கு வர தயாராகி வருகின்றன.

மேலும் தனது திரைப்பயணத்தில் முதல் முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள நடிகர் மோகன்லால் பர்ரோஸ் கார்டியன் ஆஃப் ட'காமா'ஸ் ட்ரெஷர் எனும் ஃபேண்டசி அட்வென்சர் திரைப்படத்தை இயக்கி நடிக்கிறார். அடுத்ததாக மீண்டும் த்ரிஷ்யம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடித்துள்ளா ராம் திரைப்படமும் ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

இதனிடையே மீண்டும் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ள 12Th மேன் திரைப்படம் விரைவில் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 2 மற்றும் ப்ரோ டாடி படங்களை தொடர்ந்து 12Th மேன் திரைப்படம் OTTயில் நேரடியாக ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 12TH மேன் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து உன்னி முகுந்தன், ஷிவடா, அனுஸ்ரீ, அனுசித்தாரா, லியோனா லிஷாய், பிரியங்கா நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 12TH மேன் படத்தில் சதீஷ் குரூப் ஒளிப்பதிவில், அனில் ஜான்சன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் மோகன்லாலின் படத்தின் 12Th மேன் டீசர் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள 12Th மேன் டீசர் இதோ…