வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி இதோ !
By | Galatta | April 27, 2022 19:32 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிலம்பரசன் TR.சிறு வயதில் இருந்தே நடிக்கும் இவருக்கு எந்த அளவு புகழ் வந்ததோ அந்த அளவு பல சர்ச்சைகளையும் கடந்து வந்துள்ளார் சிம்பு.என பிரச்சனைகள் வந்தாலும் இவரது ரசிகர்கள் இவரை விட்டுக்கொடுத்ததில்லை.
உடல் பருமனாக கடந்த சில வருடங்களாக இருந்து வந்த STR அல்டிமேட்டாக ட்ரான்ஸ்பார்ம் ஆகி பழைய நிலைக்கு திரும்பினார்.இவரது ட்ரான்ஸ்பரமேஷனை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.இதனை அடுத்து பத்துதல,வெந்து தணிந்தது காடு படங்களில் நடித்து வருகிறார்.
வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தினை கெளதம் மேனன் இயக்குகிறார்.இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.ராதிகா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.சித்தி இத்நானி இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
நீரஜ் மாதவ்,ராதிகா உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.தற்போது இந்த படத்தின் முதல் பாடல் வரும் மே 6ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் ஒரு புது போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.இந்த பாடல் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Much awaited Single from @SilambarasanTR_'s #VTK Directed by @menongautham will be out on May 6th ! #VendhuThanindhathuKaadu #SilambarasanTR
— Vels Film International (@VelsFilmIntl) April 27, 2022
An @arrahman Musical
Produced by @VelsFilmIntl Dr @IshariKGanesh @SiddhiIdnani @rajeevan69 @Ashkum19 @DoneChannel1 @thinkmusicindia pic.twitter.com/45cOirVaXV