தமிழ் சினிமாவிலேயே இது பெரிய BENCHMARK!- சூர்யாவின் கங்குவா படைத்த அதிரடி சாதனை... KEஞானவேல் ராஜாவின் ஸ்பெஷல் பேட்டி இதோ!

சூர்யாவின் கங்குவா அமேசான் பிரைம் வீடியோவில் 80கோடிக்கு விற்பனை,suriya in kanguva bagged by amazon prime for 80crores | Galatta

ஆகச்சிறந்த நடிகராகவும் முன்னணி நட்சத்திர நாயகராகவும் வலம் வரும் நடிகர் சூர்யா, அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் நடைபெற்ற நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டை மையப்படுத்தி இதுவரை பேசப்படாத ஜல்லிக்கட்டின் மறுபக்கம் குறித்து அழுத்தமாக பேசும் படமாக வெற்றிமாறன் உருவாக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் மிக நுணுக்கமான பல கிராபிக்ஸ் பணிகள் பயன்படுத்தப்பட உள்ளன. அந்த வகையில், வாடிவாசல் திரைப்படத்தின் VFX / CG பணிகளுக்காக உலக அளவில் மிக பிரபலமான அவதார், கிங் காங், காட்சில்லா மற்றும் மார்வல் படங்களுக்கு VFX பணிகளை மேற்கொண்ட WETA நிறுவனத்தோடு வெற்றிமாறன் இணைந்துள்ளார். இதற்காக லண்டனில் தங்கி இருந்து தற்போது வாடிவாசல் CG பணிகளை இயக்குனர் வெற்றிமாறன் கண்காணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தனது முதல் தேசிய விருதை பெற்ற சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக தற்போது இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடித்து வரும் புதிய படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ள சூர்யா, தனது திரை பயணத்தில் 42 ஆவது திரைப்படமாக இயக்குனர் சிவா இயக்கும் கங்குவா திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். சூர்யாவுடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கும் கங்குவா திரைப்படத்தில் வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பிரம்மாண்டமான பீரியட் ஆக்ஷன் திரைப்படமாக 3D தொழில்நுட்பத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, UV CREATIONS வழங்கும் கங்குவா திரைப்படத்தை இந்தியாவின் 10 மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

இந்த நிலையில், நமது கலாட்டா தமிழ் சேனலில் பிரத்யேக பேட்டியில் பேசிய ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா கங்குவா திரைப்படம் குறித்த பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். "கங்குவா திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா அவர்களின் வியாபாரம் எவ்வளவு வளர்கிறது… இதன் பிறகு எந்த ஒரு உச்சத்திற்கு போகும் என்று நினைக்கிறீர்கள்?" என நாம் கேட்டபோது,

“அதை நானே சொல்லக்கூடாது… எப்படியும் எல்லா செய்திகளும் வரும்..  இப்போது நாம் அமேசான் பிரைம் உடன் டிஜிட்டல் உரிமம் முடித்திருக்கிறோம். தென்னிந்தியாவிற்கு மட்டும் 80 கோடி ரூபாய்க்கு முடித்திருக்கிறோம். ஒட்டு மொத்த உலக அளவிலான உரிமம் கிடையாது, வெறும் தென்னிந்திய உரிமம் மட்டும் 80 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளோம். இது தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய பெஞ்ச்மார்க். இந்த அளவிற்கான வியாபாரம் வேறு எந்த படங்களுக்கும் நடந்தது கிடையாது. அப்படி இருக்கும்போது நீங்கள் மற்ற வியாபாரங்களை எல்லாம் கணக்கெடுத்து பாருங்கள் எப்படி போகும் என்று…” என தெரிவித்துள்ளார். மேலும் பல முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட KE.ஞானவேல் ராஜா அவர்களின் முழு பேட்டி இதோ…
 

சர்தார் தயாரிப்பாளர் உடன் இணைந்த ஆர்யா - கௌதம் கார்த்திக்... சூப்பர் ஹிட் இயக்குனரின் அடுத்த ஆக்சன் பட அதிரடியான முதல் GLIMPSE இதோ!
சினிமா

சர்தார் தயாரிப்பாளர் உடன் இணைந்த ஆர்யா - கௌதம் கார்த்திக்... சூப்பர் ஹிட் இயக்குனரின் அடுத்த ஆக்சன் பட அதிரடியான முதல் GLIMPSE இதோ!

BOX OFFICEஐ அதிரவிடும் பொன்னியின் செல்வன் 2... 4நாட்களிலேயே இத்தனை கோடியா?- மிரள வைக்கும் வசூல் நிலவரம் இதோ!
சினிமா

BOX OFFICEஐ அதிரவிடும் பொன்னியின் செல்வன் 2... 4நாட்களிலேயே இத்தனை கோடியா?- மிரள வைக்கும் வசூல் நிலவரம் இதோ!

வேகமெடுக்கும் சூது கவ்வும் 2 படம்... ரசிகர்களை உற்சாகப்படுத்த படக்குழு வெளியிட்ட கலக்கலான புது GLIMPSE இதோ!
சினிமா

வேகமெடுக்கும் சூது கவ்வும் 2 படம்... ரசிகர்களை உற்சாகப்படுத்த படக்குழு வெளியிட்ட கலக்கலான புது GLIMPSE இதோ!