2020 உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கியது.கொரோனா எனப்படும் வைரஸின் தாக்கம் இன்னும் உலகம் முழுவதும் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில்.பல துயர சம்பவங்கள் உலங்கெங்கிலும் இந்த வருடம் அதிகம் நடந்த வண்ணம் உள்ளன.

இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கி மக்கள் பலி என்று கொரோனாவை தாண்டி பல பிரச்சனைகள் இந்தியாவில் இருந்தன.இந்நிலையில் அடுத்து புதிதாக ஒரு பிரச்சனை தொடங்கியது.Locust எனப்படும் வெட்டுக்கிளிகள் இந்தியாவின் வடமாநிலங்களில் படையெடுக்க தொடங்கியுள்ளன.இந்த வெட்டுக்கிளிகள் பயிர்களை சாப்பிட்டு அழித்துவிடும்.லட்சக்கணக்கில் இருக்கும் இந்த வெட்டுக்கிளிகளால் பஞ்சம் ஏற்படும் அபாயமும் உள்ளது.

தற்போது நடந்து வரும் இந்த சம்பவங்கள் அனைத்தும் சில படங்களின் கருவாக இருந்துள்ளன.கொரோனா போன்ற ஒரு கொடிய நோய் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வருவதுபோல் சூர்யாவின் 7ஆம் அறிவு படத்தின் கதை இருக்கும்.அடுத்ததாக உறியடி 2 படத்தில் கெமிக்கல் ஃபேக்டரியில் இருந்து விஷவாயு வெளியேறி மக்கள் பலியானார்கள் என்பது தான் படத்தின் மையக்கரு.இந்த படத்தை சூர்யா தயாரித்திருந்தார்.அடுத்ததாக தற்போது வரும் வெட்டுக்கிளிகள் சூர்யாவின் சமீபத்திய படமான காப்பான் படத்தின் முக்கிய கருவாக இருந்துள்ளது.

இவை அனைத்திலும் பொதுவாக இருக்கும் ஒரு பெயர் சூர்யா.சூர்யா ஒரு இல்லுமினாட்டியா? இல்லை தீர்க்கதரிசியா? என்று பல இடங்களில் விவாதங்களும்,சமூகவலைத்தளங்களில் போஸ்ட்களும் தொடங்கின.சூர்யாவின் படங்களில் வருபவை நடக்கின்றன என்று நமது நெட்டிசன்கள் மீம்களை ஆரம்பித்தனர்.

சூர்யாவின் படங்கள் இருக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றாய் நடந்து வருகின்றன என்று தொடங்கிய நெட்டிசன்கள்.இன்னும் 7ஆம் அறிவு படமே முடியல அதுக்குள்ள காப்பான் வந்துருச்சு என்று ஆரம்பித்தனர்.சூர்யா 24 படத்தில் சயின்டிஸ்ட் ஆக இருப்பார் அதில் டைம் மெஷின் வாட்ச் ஒன்றை கண்டுபிடிப்பார்.அதனை பயன்படுத்தி பின்னோக்கி சென்று நடக்கும் பிரச்சனை அனைத்தையும் சரி செய்யுமாறு ஒருவர் மீம் பதிவிட்டிருந்தார்.மற்றோருவர் சூர்யா நல்லவேளை மிருதன் படத்தில் நடிக்கவில்லை நடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று பதிவிட்டார்.மேலும் ஒருவர் சூர்யா மிருதன் படத்தில் நடித்திருந்தால் நமது ஊரிலும் சாம்பிகளை பார்த்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.அந்த சூரரை போற்று படத்தையும் ரிலீஸ் பண்ணிவிடுங்க அதுல என்ன இருக்குன்னு பாப்போம்னு ரசிகர்கள் தங்கள் கவலைகளை மறந்தும்,பிறரை சந்தோஷப்படுத்தும் நோக்கிலும் சில மீம்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.இவை அனைத்தும் வேடிக்கையாக இருந்தாலும் இது போன்ற கடினமான சூழ்நிலைகளில் நாம் பாதுகாப்பாக இருந்து இந்த சூழ்நிலையை வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.