“கூர்வாளை விட கூர்மையான கண்கள் அவனுடையது..” சூர்யாவின் ‘கங்குவா’ படக்குழு கொடுத்த அப்டேட்.. ரசிகர்களிடையே வைரலாகும் Glimpse இதோ..

சூர்யா கங்குவா சிறப்பு முன்னோட்டம் குறித்த அப்டேட் இதோ – Suriya kanguva glimpse update here | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. எந்தவொரு கதாபாத்திரத்தையும் நேர்த்தியாக கொடுத்து நடிக்க கூடிய இவர் எதார்த்த சினிமாவிலும் கமர்ஷியல் மாஸ் திரைப்படங்களிலும் ஒரு சேர நடித்து தனக்கான தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். இவரது நடிப்பில் முன்னதாக வெளியான  சூரரை போற்று, ஜெய் பீம் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் பல விருது மேடைகளையும் அலங்கரித்தது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு  சூர்யா நடிப்பில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் காமர்ஷியலாக ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் ‘வாடிவாசல்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கின்றார். அதன்பின்னர் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனிடையே இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. பிரம்மாண்ட பொருட்செலவில் வித்யாசமான கதைகளத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சூர்யா பல தோற்றங்களில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகர் தீஷா பத்தானி நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பில்  KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைக்கின்றார் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத். மேலும் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய நிஷத் யூசுப் படத்தொகுப்பு செய்யவுள்ளார்.

போர் காட்சிகளுடன் தமிழ் சினிமா இதுவரை கண்டிராத கதைகளத்தில் உருவாகும் கங்குவா படம் முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தினை பத்து மொழிகளில் மிகப்பெரிய அளவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நாளை படத்தின் நாயகன் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் சிறப்பு முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர்.

இதுகுறித்த சிறப்பு போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் மிரட்டலான தோற்றத்தில் வடுக்களுடன் உள்ள சூர்யாவின் கண்கள் உள்ளது. மேலும் அதனுடன் ‘கூர் வாளை விட கூர்மையானது அவனது கண்கள்’ என்று பதிவிட்டுள்ளனர் படக்குழுவினர். அறிவிப்பின் படி இன்று இரவு 12.01 க்கு சூர்யாவின் கங்குவா பட முன்னோட்டம் வெளியாகவுள்ளது. தற்போது இந்த அறிவிப்பினை ரசிகர்கள் இணையத்தில் வெகுவாக பகிர்ந்து வருகின்றனர். நாளை வெளியாகவிருக்கும் சூர்யாவின் கங்குவா பட சிறப்பு முன்னோத்திற்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் குரல் கொடுத்திருக்கின்றனர் என்பது கூடுதல் தகவல்.

His eyes sharper than the sword! 🗡️

The King arrives 👑#GlimpseOfKanguva from 23rd July, 12:01 AM @Suriya_offl @DishPatani @directorsiva @ThisIsDSP @kegvraja @UV_Creations @saregamasouth @KanguvaTheMovie#Kanguva 🦅 pic.twitter.com/nUQThOjHDe

— Studio Green (@StudioGreen2) July 22, 2023

“அனைத்து புகழும் வசந்தபாலன் சாருக்கு மட்டுமே சேர வேண்டும்” அநீதி படம் குறித்து நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்த அர்ஜுன் தாஸ்.. வைரல் பதிவு உள்ளே..
சினிமா

“அனைத்து புகழும் வசந்தபாலன் சாருக்கு மட்டுமே சேர வேண்டும்” அநீதி படம் குறித்து நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்த அர்ஜுன் தாஸ்.. வைரல் பதிவு உள்ளே..

“இது மனித வரலாற்றில் பேரவலம்..” மணிப்பூர் கலவரத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்த பிரபலங்கள்..! விவரம் உள்ளே..
சினிமா

“இது மனித வரலாற்றில் பேரவலம்..” மணிப்பூர் கலவரத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்த பிரபலங்கள்..! விவரம் உள்ளே..

நோலன் படம் முதல் விஜய் ஆண்டனி படம் வரை..  இந்த வாரம் திரையரங்குகள், OTT- யில் வெளியாகும் திரைபடங்களின் பட்டியல் உள்ளே..
சினிமா ஸ்பெஷல்ஸ்

நோலன் படம் முதல் விஜய் ஆண்டனி படம் வரை.. இந்த வாரம் திரையரங்குகள், OTT- யில் வெளியாகும் திரைபடங்களின் பட்டியல் உள்ளே..