ஹீரோவாக கவனம் ஈர்க்கும் நடிகர் சதீஷ்..! - ‘வித்தைக்காரன்’ டீசரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ஜிவி பிரகாஷ், கீர்த்தி சுரேஷ்..

சதீஷ் ஹீரோவாக நடிக்கும் வித்தைக்காரன் பட டீசர் வெளியானது வீடியோ உள்ளே - Actor Sathish New movie Vithaikkaran Teaser out | Galatta

தமிழ் சினிமாவின் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் தொடங்கி இன்று தளபதி விஜயுடன் கூட்டணி அமைத்து உருவாகி வரும் லியோ வரை லோகேஷ் கனகராஜ் புகழ் நாடு முழுவதும் கொடி கட்டி பறந்து வருகிறது. அடுத்தடுத்த பிளாக் பஸ்டர் கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ திரைப்படத்தின் இறுதிகட்ட வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் திரைப்படமான மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர் வெங்கி. தற்போது முதல் முறை இயக்குனராக வெங்கி களமிறங்கும் திரைப்படம் தான் ‘வித்தைக்காரன்’.

பிரபல நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்த  நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் வித்தைக்காரன். முன்னதாக கதாநாயகனாக நாய் சேகர் மற்றும் ஒ மை கோஸ்ட் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் சதிஷ் ஹீரோவாக களமிறங்கும் அடுத்த திரைப்படம் வித்தைக்காரன். இப்படத்தில் நடிகர் சதீஷ் மேஜிசியனாக நடித்துள்ளார்.

முதல் முறையாக முற்றிலும் மாறுபட்ட சீரியஸ் கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ஆனந்த் ராஜ், ரமேஷ் திலக், ஜான் விஜய், தங்கதுரை மற்றும் இயக்குனர் வெங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வொய்ட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் யுவா கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய அருள் E சித்தார்த் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் இந்த படத்திற்கு VBR இசையமைக்கிறார்.

 

Excited to unfold #Vithaikkaaran Teaser ▶️

My warm wishes to the team 👍@actorsathish #SimranGupta @WCF2021 @vijaywcf @Venki_dir @Vairamuthu @vbrcomposer @iamyuvakarthickhttps://t.co/sk73CHoiEm

— G.V.Prakash Kumar (@gvprakash) July 22, 2023

இயக்குனர் வெங்கி இயக்கத்தில் விறுவிறுப்பான கதைகளத்தில் உருவாகியுள்ள வித்தைக்காரன் படத்தின் டீசரை தற்போது நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட வைரத்தை கொள்ளை கும்பல் கூட்டணியுடன் திருடும் மேஜிசியன் சதீஷ் என்ற கதைகளத்தில் டீசர் அமைந்துள்ளது. தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

 

So happy to release the teaser of #Vithaikkaaran.
This is looking intense @Venki_dir 😁
Nice to see you essaying a serious role like this @actorsathish! 😁

Wishing all the success to you guys and the entire team! 🤗❤️

▶️ https://t.co/Auw7vR6Wlt#SimranGupta @WCF2021 @vijaywcfpic.twitter.com/m4nQWGIHMA

— Keerthy Suresh (@KeerthyOfficial) July 22, 2023

இப்படத்தையடுத்து நடிகர் விமல் நடிக்கும் துடிக்கும் கரங்கள் என்ற படத்தில் மிக  முக்கியமான கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்து வருகிறார். பின்னர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் ‘4G’ மற்றும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’  ஆகிய படங்களில் நடிகர் சதீஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

“இது மனித வரலாற்றில் பேரவலம்..” மணிப்பூர் கலவரத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்த பிரபலங்கள்..! விவரம் உள்ளே..
சினிமா

“இது மனித வரலாற்றில் பேரவலம்..” மணிப்பூர் கலவரத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்த பிரபலங்கள்..! விவரம் உள்ளே..

நோலன் படம் முதல் விஜய் ஆண்டனி படம் வரை..  இந்த வாரம் திரையரங்குகள், OTT- யில் வெளியாகும் திரைபடங்களின் பட்டியல் உள்ளே..
சினிமா ஸ்பெஷல்ஸ்

நோலன் படம் முதல் விஜய் ஆண்டனி படம் வரை.. இந்த வாரம் திரையரங்குகள், OTT- யில் வெளியாகும் திரைபடங்களின் பட்டியல் உள்ளே..

மீண்டும் களத்தில் இறங்கும் 'மின்னல் முரளி'.. ரசிகர்களுக்கு படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்.. அட்டகாசமான அப்டேட் இதோ..
சினிமா

மீண்டும் களத்தில் இறங்கும் 'மின்னல் முரளி'.. ரசிகர்களுக்கு படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்.. அட்டகாசமான அப்டேட் இதோ..