அஜித் குமாரின் வீட்டில் சூர்யா & கார்த்தி... தந்தை மறைவுக்கு நேரில் சென்று துக்கம் விசாரிப்பு! வைரல் வீடியோ

அஜித் குமாரின் தந்தை மறைவுக்கு நேரில் துக்கம் விசாரித்த சூர்யா - கார்த்தி,suriya and karthi visits ajith kumar home for his father demise | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. கடந்த 2023 பொங்கல் வெளியீடாக வெளிவந்த துணிவு திரைப்படம் பக்கா ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அஜித்குமார் நடிக்கும் அடுத்த திரைப்படமான AK62 திரைப்படத்தின் அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் AK62 திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நடிகர் அஜித்குமாரின் தந்தை திரு.P.S.மணி என்கிற திரு.P.சுப்பிரமணியம்  அவர்கள் கடந்த மார்ச் 24 ஆம் தேதி அதிகாலை காலமானார். அவருக்கு வயது 85. வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் P.S.மணி அவர்கள் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பல கோடி ரசிகர் பெருமக்களும் பிரபலங்களும் முக்கிய பிரமுகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். அந்த வகையில் தளபதி விஜய் அஜித் குமார் அவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று மறைந்த அவரது தந்தையின் பூத உடலுக்கு மரியாதை செலுத்தியதோடு தனது இரங்கலையும் தெரிவித்து வந்தார்.

அதேபோல் தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களும் அஜித் குமார் அவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று இறுதி மரியாதை செலுத்தினார். முன்னதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் நடிகர் அஜித்குமார் அவர்களின் தந்தை மறைவுக்கு இரங்கல் அறிக்கையை வெளியிட்டார். இந்நிலையில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களும் சகோதரர்களுமான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தற்போது அஜித் குமார் அவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று தந்தை P.S.மணி அவர்களின் மறைவுக்கு துக்கம் விசாரித்துள்ளனர். இன்று மார்ச் 27ஆம் தேதி அஜித்குமார் அவர்களின் வீட்டிற்கு சென்ற சூர்யா மற்றும் கார்த்தியின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ…
 

நடிகர் அஜித்தின் தந்தை மறைவை ஒட்டி இன்று நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி.#AjithKumar #PSubramaniyam #AK #Suriya #Karthi #Galatta pic.twitter.com/u7iabSoAiY

— Galatta Media (@galattadotcom) March 27, 2023

பெரும் அபாயத்தை கடந்து வந்த தளபதி விஜயின் லியோ படக்குழு... காஷ்மீர் ஷூட்டிங் அனுபவங்கள் பகிர்ந்த பிரபலம்! விவரம் உள்ளே
சினிமா

பெரும் அபாயத்தை கடந்து வந்த தளபதி விஜயின் லியோ படக்குழு... காஷ்மீர் ஷூட்டிங் அனுபவங்கள் பகிர்ந்த பிரபலம்! விவரம் உள்ளே

அனல் பறக்கும் ஆக்ஷனில் வெற்றிமாறன் - சூரி - விஜய் சேதுபதியின் விடுதலை பாகம்1... பதை பதைக்கும் மிரட்டலான மேக்கிங் வீடியோ இதோ!
சினிமா

அனல் பறக்கும் ஆக்ஷனில் வெற்றிமாறன் - சூரி - விஜய் சேதுபதியின் விடுதலை பாகம்1... பதை பதைக்கும் மிரட்டலான மேக்கிங் வீடியோ இதோ!

சுசீந்திரன் தயாரிப்பில் பாரதிராஜா நடிக்கும் புதிய படம்... இயக்குனர் யார் தெரியுமா?- கவனம் ஈர்க்கும் அசத்தலான அறிவிப்பு இதோ!
சினிமா

சுசீந்திரன் தயாரிப்பில் பாரதிராஜா நடிக்கும் புதிய படம்... இயக்குனர் யார் தெரியுமா?- கவனம் ஈர்க்கும் அசத்தலான அறிவிப்பு இதோ!