அனல் பறக்கும் ஆக்ஷனில் வெற்றிமாறன் - சூரி - விஜய் சேதுபதியின் விடுதலை பாகம்1... பதை பதைக்கும் மிரட்டலான மேக்கிங் வீடியோ இதோ!

வெற்றிமாறனின் விடுதலை பட மேக்கிங் வீடியோ வெளியீடு,vetrimaaran soori vijay sethupathi in viduthalai part 1 making video | Galatta

இந்திய சினிமாவே பெருமை கொள்ளும் வகையிலான தரமான திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் பல வளரும் இயக்குனர்களுக்கு முன் உதாரணமாகவும் ஆகச்சிறந்த இயக்குனராகவும் திகழ்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இயக்குனர் வெற்றிமாறன் அடுத்தடுத்து இயக்கிய ஆடுகளம், விசாரணை வடசென்னை, அசுரன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் வென்று குவித்தன. இதுவரை தனது படைப்புகளுக்காக ஐந்து தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்தடுத்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

அந்த வகையில் முதல்முறையாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். கலைப்புலி.S.தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகும் இந்த வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், வெகு விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் வடசென்னை திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் விரைவில் தொடங்கும் என சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக தயாராகி வரும் திரைப்படம் விடுதலை.

RS இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி ப்ரொடக்ஷன் வழங்க, பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடிகர் சூரியும், பெருமாள் வாத்தியார் எனும் முன்னணி கதாப்பாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளனர். R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், R.ராமர் படத்தொகுப்பு செய்ய, பீட்டர் ஹெய்ன் மற்றும் ஸ்டண் சிவா ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ள விடுதலை திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் விடுதலை பாகம் 1 திரைப்படம் வருகிற மார்ச் 31ம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இத்திரைப்படம் தொடங்கப்பட்ட சமயத்தில் இருந்து படப்பிடிப்பு தளத்தில் இருந்த பல சவாலான விஷயங்கள் குறித்து தொடர்ச்சியாக செய்திகள் வெளி வந்தன. மேலும் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் ஸ்டைலில் இருக்கும் அதிரடி ஆக்சன் காட்சிகளின் மீது ரசிகர்களுக்கு எப்போதும் தனி ஆர்வம் இருக்கும் நிலையில், இந்த விடுதலை திரைப்படமும் அந்த கவனத்தை பெற்றது. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படத்தின் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிர வைத்தது. 

இந்நிலையில் இன்னும் எதிர்பார்ப்புகளை கூட்டும் வகையில் தற்போது விடுதலை திரைப்படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதுவரை பார்த்திராத அளவிற்கு நிஜத்திற்கு மிகவும் நெருக்கமான வகையில் ஸ்டன்ட் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதலை திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவில் நடிகர் சூரி டூப் இல்லாமல் மிகுந்த ரிஸ்க் எடுத்து ஆக்சன் காட்சிகள் மிகத் தத்ரூபமாக நடித்திருப்பதும் நிஜமாகவே ஆக்ஷன் காட்சிகளில் அடிபடுவதும் தடுக்கி கீழே விழும் காட்சிகளும் பயமுறுத்தும் வகையில் இருந்தாலும் தற்போது பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது. வெற்றிமாறனின் அடுத்த தரமான படைப்பாக வெளிவர இருக்கும் விடுதலை படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோ இதோ…
 

‘நீங்கள் சேர நான் தான் காரணம்!’- கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமண ரகசியத்தை பகிர்ந்த பிரியா பவானி சங்கர்! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

‘நீங்கள் சேர நான் தான் காரணம்!’- கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமண ரகசியத்தை பகிர்ந்த பிரியா பவானி சங்கர்! ட்ரெண்டிங் வீடியோ

இருக்கலாம் அல்லது மாற்றப்படலாம்... பொன்னியின் செல்வன் 2 பட பாடல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த முன்னணி பாடகி! விவரம் உள்ளே
சினிமா

இருக்கலாம் அல்லது மாற்றப்படலாம்... பொன்னியின் செல்வன் 2 பட பாடல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த முன்னணி பாடகி! விவரம் உள்ளே

பில்லியன் டாலர் குடுத்தா GLAMOUR PHOTOSHOOT பண்ணுவீங்களா?- சுவாரஸ்யமாக பதிலளித்த பிரியா பவானி சங்கர்! வைரல் வீடியோ இதோ
சினிமா

பில்லியன் டாலர் குடுத்தா GLAMOUR PHOTOSHOOT பண்ணுவீங்களா?- சுவாரஸ்யமாக பதிலளித்த பிரியா பவானி சங்கர்! வைரல் வீடியோ இதோ