மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 உடன் கைகோர்க்கும் உலகநாயகன் கமல்ஹாசன்! அட்டகாசமான அறிவிப்பு இதோ

பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவில் இணைந்த கமல்ஹாசன்,Kamal haasan as chief guest for ponniyin selvan 2 audio launch | Galatta

தனது தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இன்று என் திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்த வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைந்து இந்த 2023 தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் புதிய படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருகிறார். கமல்ஹாசனின் நடிப்பில் 234 வது திரைப்படமாக தயாராகவுள்ள KH234 திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இயக்குனர் மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்திற்கு உலகநாயகன் கமல்ஹாசன் தனது வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தார். மேலும் பிரம்மாண்டமாக நடைபெற்ற பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் ரசிகர்களிடையே எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி அவர்களின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்தினம் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோரது திரைக்கதை வசனத்தில் இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன.

பொன்னியின் செல்வன் நாவலின் மிக முக்கிய கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில், ரவிவர்மனின் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக வருகிற மார்ச் 29ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அட்டகாசமான அந்த அறிவிப்பு இதோ…
 

A momentous occasion calls for a momentous guest!
Join us in welcoming the one and only #UlagaNayagan @ikamalhaasan sir to unveil the music and trailer of #PS2 on March 29th at Nehru Indoor Stadium, Chennai!#CholasAreBack#PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @LycaProductionspic.twitter.com/JkFozVN60P

— Madras Talkies (@MadrasTalkies_) March 27, 2023

அனல் பறக்கும் ஆக்ஷனில் வெற்றிமாறன் - சூரி - விஜய் சேதுபதியின் விடுதலை பாகம்1... பதை பதைக்கும் மிரட்டலான மேக்கிங் வீடியோ இதோ!
சினிமா

அனல் பறக்கும் ஆக்ஷனில் வெற்றிமாறன் - சூரி - விஜய் சேதுபதியின் விடுதலை பாகம்1... பதை பதைக்கும் மிரட்டலான மேக்கிங் வீடியோ இதோ!

சுசீந்திரன் தயாரிப்பில் பாரதிராஜா நடிக்கும் புதிய படம்... இயக்குனர் யார் தெரியுமா?- கவனம் ஈர்க்கும் அசத்தலான அறிவிப்பு இதோ!
சினிமா

சுசீந்திரன் தயாரிப்பில் பாரதிராஜா நடிக்கும் புதிய படம்... இயக்குனர் யார் தெரியுமா?- கவனம் ஈர்க்கும் அசத்தலான அறிவிப்பு இதோ!

வந்தியத்தேவனாக பக்கா ஆக்சனில் கார்த்தி... பொன்னியின் செல்வன் 2 பட அதிரடியான புது ப்ரோமோ வீடியோ இதோ!
சினிமா

வந்தியத்தேவனாக பக்கா ஆக்சனில் கார்த்தி... பொன்னியின் செல்வன் 2 பட அதிரடியான புது ப்ரோமோ வீடியோ இதோ!