“அக நக’ பாடல் வரிகள் Tongue twisters மாதிரி இருந்துச்சு..” பின்னணி பாடகி ஷக்திஸ்ரீ கோபாலன்.. – சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

அகநக பாடல் குறித்து ஷக்தி ஸ்ரீ கோபாலன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – singer shakthisree gopalan about aga naga song making | Galatta

தமிழ் சினிமா ரசிகர்கள் இன்று முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பாடல் ‘அகநக பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் வந்தியத்தேவன் மற்றும் குந்தவை இடையேயான காதல் பாடலாக இடம் பெற்றிருக்கும் இந்த பாடல் சமீபத்தில் ஐந்து மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்று டிரெண்ட்டிங்கில் உள்ளது. தமிழில் இப்பாடலை பாடிய பிரபல பாடகர் ஷக்தி ஸ்ரீ கோபாலன் அவர்களிடம் இப்பாடல் பாடிய அனுபவம் குறித்து நமது கலாட்டா சிறப்பு பேட்டியில் கேட்கையில் அவர்,

ஒரு பாடகரா இந்த மாதிரி பாடல் பாட கிடைச்சது சந்தோஷமா இருக்கு. நன்றி ஏ.ஆர் ரஹ்மான் சார்.  ரொம்ப முத்துமாலை மாதிரி ஒவ்வொரு வரிகளையும் அவ்ளோ அழகா சேர்த்து இருக்குறா மாதிரி இருக்கும். முதல் முதல் பாடல் கேட்டு பாடும் போது tongue twister மாதிரி தான் இருந்தது. ரஹ்மான் சார் இசையமைத்திருக்குற விதத்துல அப்படியே வந்து என்னால் பாட முடிஞ்சது. அந்த இசையை கேட்டு தன்னாலே பாட முடிஞ்சுது.." என்றார். மேலும்  "மெட்ராஸ் டாக்கீஸ் ல ஒரு மேக்கிங் வீடியோ பார்த்தேன். ரொம்ப அற்புதமா இருந்தது. அந்த நிகழ்வை அழகா தொகுத்து திரும்பவும் அந்த நிகழ்வை அனுபவிக்க முடிஞ்சிது.  இந்த பாடல் பதிவு செய்யும் போது இந்த பாடல் சோழநாட்டு இளவரசி குந்தவை பார்வையிலிருந்து வரும் பாடல் என்று அறிவிப்பு கிடைத்தது. ரஹ்மான் சார் இசை, இளங்கோ சார் வரிகள் எல்லாம் ஒரு ராஜ வம்சம் உணர்வு கொடுத்தது." என்றார் பின்னணி பாடகர் ஷக்தி ஸ்ரீ கோபாலன்

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி கடந்த ஆண்டு முதல் பாகம் வெளியானது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கு முன்னதாக இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வரும் மார்ச் மாதம் 29ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிகட்ட வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க பொன்னியின் செல்வன் படத்தின் இடம் பெற்றுள்ள அக நக பாடலுக்கு ரசிகர்கள் வைப் செய்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் பின்னணி பாடகர் ஷக்தி ஸ்ரீ கோபாலன் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..

“என்னை அரசியலுக்கு இழுக்காதீர்கள்... உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது” வைரலாகும் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் பதிவு – விவரம் இதோ..
சினிமா

“என்னை அரசியலுக்கு இழுக்காதீர்கள்... உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது” வைரலாகும் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் பதிவு – விவரம் இதோ..

ராம் சரண் பிறந்தநாளுக்கு இயக்குனர் ஷங்கர் கொடுத்த சர்ப்ரைஸ்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – அட்டகாசமான Glimpse இதோ..
சினிமா

ராம் சரண் பிறந்தநாளுக்கு இயக்குனர் ஷங்கர் கொடுத்த சர்ப்ரைஸ்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – அட்டகாசமான Glimpse இதோ..

“அக நக பாடல் இப்படிதான் உருவானது” பின்னணி பாடகி ஷக்திஸ்ரீ கோபாலன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. – சிறப்பு நேர்காணல் இதோ..
சினிமா

“அக நக பாடல் இப்படிதான் உருவானது” பின்னணி பாடகி ஷக்திஸ்ரீ கோபாலன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. – சிறப்பு நேர்காணல் இதோ..