“யாரையாவது டேட்டிங் செய்யலாமே?” என்ற கேள்விக்கு சமந்தா கொடுத்த பதில் – ரசிகர்களிடையே வைரலாகும் பதிவு இதோ..

ரசிகரின் கேள்விக்கு சமந்தாவின் சாமர்த்தியமான பதில் வைரல் - Samantha adorable reply to fan | Galatta

இந்தியாவில் தற்போது பேசுபொருளாக இருக்கும் நட்சத்திரங்களில் மீக முக்கியமானவர் நடிகை சமந்தா. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது பாலிவுட் பக்கமும் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். தமிழ், தெலுங்கு என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தனக்கான இடத்தை பிடித்து தனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்துள்ளார். மேலும் பாலிவுட் இணைய தொடரில் நடித்து இந்திய அளவிலும் சமந்தா தற்போது பிரபலமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு சமந்தா தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் நடித்தார்.  இவரது ‘கதீஜா’ கதாபாத்திரம் ரசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதே ஆண்டில் தெலுங்கில் ‘யசோதா’ திரைப்படம் வெளியாகியது. அது அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உணர்வு பூர்வமான படமாக அமைந்தது. மேலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே சமந்தா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவான ‘சாகுந்தாலம்’ திரைப்படம் முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தில் பான் இந்திய திரைப்படமாக வரும் ஏப்ரல் 14 ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் மீண்டும் பாலிவுட்டில் பிரபல ஹாலிவுட் இயக்குனர் தயாரிப்பில் சிடாடேல் இந்திய வடிவில் முதன்மை கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் விஜய தேவரகொண்டவுடன் இணைந்து ‘குஷி’ படத்தில் நடித்து வருகிறார். காதல் திரைப்படமாக உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருந்தது.  

ரசிகர்களால் கொண்டாடப்படும் சமந்தா சமூக வலைதளங்களில் அதிகம் ஈடுபாடுடன் இருப்பது வழக்கம் அதன்படி தனது ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளிப்பது வழக்கம். இதில் ரசிகர் ஒருவர் சமந்தாவின் வீடியோ ஒன்றை பகிர்ந்து “இதை நான் இங்கு சொல்ல கூடாது. இருந்தாலும் தயவு செய்து யாரையாவது டேட்டிங் செய்யுங்கள்” என்றுள்ளார்.

அந்த பதிவினை பகிர்ந்து சமந்தா “உங்களை போல் என்னை அதிகம் நேசிப்பவர்  யார்.” என்று பதிவிட்டுள்ளார் இதனஈயடுத்து சமந்தாவின் பதிவு மிகபெரிய அளவு ரசிகர்களினால் பகிரப்பட்டு வருகின்றது.

 

Who will love me like you do 🫶🏻 https://t.co/kTDEaF5xD5

— Samantha (@Samanthaprabhu2) March 26, 2023

ராம் சரண் பிறந்தநாளுக்கு இயக்குனர் ஷங்கர் கொடுத்த சர்ப்ரைஸ்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – அட்டகாசமான Glimpse இதோ..
சினிமா

ராம் சரண் பிறந்தநாளுக்கு இயக்குனர் ஷங்கர் கொடுத்த சர்ப்ரைஸ்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – அட்டகாசமான Glimpse இதோ..

“அக நக பாடல் இப்படிதான் உருவானது” பின்னணி பாடகி ஷக்திஸ்ரீ கோபாலன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. – சிறப்பு நேர்காணல் இதோ..
சினிமா

“அக நக பாடல் இப்படிதான் உருவானது” பின்னணி பாடகி ஷக்திஸ்ரீ கோபாலன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. – சிறப்பு நேர்காணல் இதோ..

பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் மறைந்தார்.. சோகத்தில் ரசிகர்கள்  - இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்..
சினிமா

பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் மறைந்தார்.. சோகத்தில் ரசிகர்கள் - இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்..