சுசீந்திரன் தயாரிப்பில் பாரதிராஜா நடிக்கும் புதிய படம்... இயக்குனர் யார் தெரியுமா?- கவனம் ஈர்க்கும் அசத்தலான அறிவிப்பு இதோ!

சுசீந்திரன் தயாரிப்பில் பாரதிராஜா நடிக்கும் படத்தை இயக்கும் மனோஜ் பாரதிராஜா,manoj bharathiraja becomes director in bharathiraja new movie | Galatta

தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் சுசீந்திரன் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். தனது முதல் திரைப்படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர் சுசீந்திரன் அடுத்து நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்த நான் மகான் அல்ல திரைப்படத்தை இயக்கினார் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நான் மகான் அல்ல திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்து வெளிவந்த அழகர்சாமியின் குதிரை திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு பெற்று பலரது பாராட்டுகளையும் பெற்றதோடு தேசிய விருதும் பெற்றது.

அடுத்தடுத்து ஆதலால் காதல் செய்வீர், பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடைசியாக கடந்த 2022ம் ஆண்டில் வீரபாண்டியபுரம் & குற்றம் குற்றமே ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன. அடுத்ததாக தற்போது விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் வள்ளி மயில் திரைப்படத்தை சுசீந்திரன் தற்போது இயக்கி வருகிறார். இதனிடையே தயாரிப்பாளராகவும் ஜீவா மற்றும் வில் அம்பு ஆகிய படங்களை தயாரித்த சுசீந்திரன் தயாரிப்பில் அடுத்து தயாராகும் புதிய திரைப்படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா ப்ரோடுக்ஷன் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்தை இயக்குனர் பாரதிராஜா அவர்களின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா இயக்குகிறார். 

இதுவரை நடிகராக பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்த மனோஜ் பாரதிராஜா இயக்குனராக முதல் முறை அவதாரம் எடுக்கும் இந்த புதிய திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த (ஏப்ரல்) மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் வருகிற மார்ச் 31ஆம் தேதி தமிழ் சினிமாவின் 10 முன்னணி இயக்குனர்கள் வெளியிட இந்த புதிய திரைப்படத்தின் முதல் பார்வை (ஃபர்ஸ்ட் லுக்) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது தந்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பல்வேறு திரைப்படங்களில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் மனோஜ் பாரதிராஜா தனது முதல் படமாக இயக்கும் திரைப்படத்தில் தனது தந்தையையே இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பம்பாய் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த மனோஜ் பாரதிராஜா அவர்கள் இந்த புதிய திரைப்படத்தை தொடங்குவதற்கு முன்பாக இயக்குனர் மணிரத்னம் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இசைக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படமாக தயாராகும் இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமாரின் இசை மிக முக்கிய பங்காற்றும் என மனோஜ் பாரதிராஜா தெரிவித்துள்ளார். மேலும் திரைப்படம் அனைத்து ரசிகர்களும் விரும்பக்கூடிய திரைப்படமாக தயாராகும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வருகிற ஏப்ரல் மாத இறுதியில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெறும் என தெரிகிறது. இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
mani ratnam ponniyin selvan 2 movie vanthiyathevan promo karthi mani ratnam ponniyin selvan 2 movie vanthiyathevan promo karthi

இருக்கலாம் அல்லது மாற்றப்படலாம்... பொன்னியின் செல்வன் 2 பட பாடல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த முன்னணி பாடகி! விவரம் உள்ளே
சினிமா

இருக்கலாம் அல்லது மாற்றப்படலாம்... பொன்னியின் செல்வன் 2 பட பாடல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த முன்னணி பாடகி! விவரம் உள்ளே

பில்லியன் டாலர் குடுத்தா GLAMOUR PHOTOSHOOT பண்ணுவீங்களா?- சுவாரஸ்யமாக பதிலளித்த பிரியா பவானி சங்கர்! வைரல் வீடியோ இதோ
சினிமா

பில்லியன் டாலர் குடுத்தா GLAMOUR PHOTOSHOOT பண்ணுவீங்களா?- சுவாரஸ்யமாக பதிலளித்த பிரியா பவானி சங்கர்! வைரல் வீடியோ இதோ

பொன்னியின் செல்வன் 2ல் எத்தனை பாடல்கள்..? இசைப்புயல் ARரஹ்மானின் அட்டகாசமான அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!
சினிமா

பொன்னியின் செல்வன் 2ல் எத்தனை பாடல்கள்..? இசைப்புயல் ARரஹ்மானின் அட்டகாசமான அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!