இந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள். 45 ஆண்டுகள் திரையுலக பயணத்தை கடந்தும் இன்றும் வசூல் மன்னனாக திகழ்கிறார் சூப்பர் ஸ்டார்.70 வயதைக் கடந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றும் கதாநாயகனாக நடிக்கிறார். ரஜினிகாந்திடம் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்தது அவரது ஸ்டைலும் வேகமும் தான். அவரது  ஸ்டைலான அசைவுகளும் அவருக்கே உரித்தான வேகமான அந்த நடையும் ரசிகர்களை கட்டிப்போட்டது. இன்றும் அதே வேகத்தில் அதே ஸ்டைலோடு இருக்கிறார். 

அதற்கு முக்கியமான ஒரு காரணம் அவர் பின்பற்றும் உடற்பயிற்சி, யோகா  மற்றும் உணவு கட்டுப்பாடு. தினசரி நடைப்பயிற்சியை விடாது பின்பற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்  சென்னையில் இருக்கும்போது தினமும் அவர் வீட்டின் வெளியில் போயஸ் கார்டன் தெருவில் நடைபயிற்சி செய்வது வழக்கம். அதேபோல் இன்றும் அதிகாலையில் அவர் நடை பயிற்சி செய்யும் பொழுது தெருவில் இருந்து ஒரு நபர் அதை புகைப்படம் எடுத்துள்ளார். புகைப்படம் எடுக்கும் அந்த நபரை நின்று பார்த்து கையசைத்து பேசி சென்றுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

LIVE, LOVE,RUN  என எழுதப்பட்டிருந்த டீ ஷர்ட் அணிந்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதிகாலை வாக்கிங் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் ரசிகர்கள் உடன் LIVE, LOVE,RUN வார்த்தைகளையும் இணைத்து பகிர்ந்து வருகிறார்கள். அதிகாலையில் வாக்கிங் செல்லும் ஃபோட்டோ கூட வைரலாகும் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மட்டுமே

இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க நடிகை குஷ்பு மீனா நயன்தாரா கீர்த்தி சுரேஷ் பிரகாஷ்ராஜ் ஜாக்கி ஷெராப் மற்றும் பல நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார்கள். இசையமைப்பாளர் டி இமான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் சில தினங்களுக்கு முன்பு இத்துறை படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் முடித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.அண்ணாத்த திரைப்படம் திரைக்கு வரும் நாளில் திரையரங்குகள் தீபாவளி கொண்டாடும்.