பாடி பில்டர் ஆக வேண்டும் என்று கனவு காண்பவர்கள் அனைவரின் மனதிலும் வரும் ஒரு முகம் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர். பாடிபில்டிங் உலகின் ஜாம்பவானான அர்னால்ட் ஸ்வாஸ்நேகர், ஹெற்குலஸ் இன் நியூயார்க்  என்ற திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். 

பல அதிரடி திரைப்படங்களில் நடித்து வந்த அர்னால்ட் டெர்மினேட்டர் திரைப்படத்திற்கு பிறகு உலக அளவில் மிகப் பெரிய சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து வெளிவந்த கமாண்டோ திரைப்படமும் உலக அளவில் சூப்பர் ஹிட்டானது. அர்னால்ட் நடித்த பிரிடேட்டர் திரைபடம் இன்றும் பலரின் தொலைக்காட்சிகளை ஆக்கிரமித்து கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது. 75 வயதை நெருங்கும் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர்  இன்னும் அதிரடி திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில்  உலகெங்கும் இருக்கும் அர்னால்ட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது தற்போது வெளிவந்த ருசிகர தகவல். நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய வெப் சீரிஸ்-ல் அதிரடி CIA ஏஜென்டாக அர்னால்ட் நடிக்க உள்ளார்.CIA ஏஜென்ட்களாக இருக்கும் தந்தை மற்றும் மகள். ஆனால் ஒருவருக்கு  மற்றொருவர் CIA ஏஜென்ட் என்பது தெரியாது. இந்த நிலையில் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்படுகிறது. 

இந்தக் கதைக் களத்தை மையமாக வைத்து உருவாக உள்ள ஒரு புதிய வெப் சீரிஸில் தந்தை கதாபாத்திரத்தில் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் நடிக்க மகளாக மோனிகா பார்பரோ  நடிக்க உள்ளார். இந்த வெப் சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெட்பிளிக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது ஏஜென்டாக அர்னால்டு நடித்த உள்ள இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.