ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து வேகமெடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம்... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த மாஸ் அப்டேட் இதோ!

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் டப்பிங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,superstar rajinikanth started his dubbing for lal salaam movie | Galatta

தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியானது. ஒட்டு மொத்த இந்திய சினிமாவிற்கும் உச்ச நட்சத்திர நாயகராக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. முதல் முறை இயக்குனர் நெல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடித்த ஜெயிலர் திரைப்படம் 25 நாட்களைக் கடந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் அடுத்ததாக தனது திரைப்பயணத்தில் 170-வது திரைப்படமாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் #தலைவர்170 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய TJ.ஞானவேல் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் நடிக்கும் தலைவர்170 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். 

இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது திரைப்படமாக உருவாகும் தலைவர் 171 திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தெரிகிறது. இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணையும் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனிடையே தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் மிக மொய்தின் பாய் எனும் முக்கிய கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் கிரிக்கெட் மற்றும் அதன் அரசியலை மையமாக வைத்த திரைப்படமாக தயாராகும் லால் சலாம் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கிரிக்கெட் சார்ந்த திரைப்படம் என்பதால் திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான கபில் தேவ் அவர்கள் முதல்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில், பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு செய்யும் லால் சலாம் திரைப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது லால் சலாம் திரைப்படத்தின் டப்பிங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்திருக்கிறார். இதனை அறிவிக்கும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு டப்பிங் ஸ்டுடியோவில் இருக்கும் தனது புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் "ஏற்கனவே இன்றைக்கு கிருஷ்ண ஜெயந்தி அதைவிட இன்னும் சிறப்பான நாளாக இன்றைய நாள் மாறிய போது... டப்பிங் வித் அப்பா" எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு டப்பிங்கில் இருப்பதாக இருப்பதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட அந்த புகைப்படம் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryarajini)