பண்ணையாரும் பத்மினியும் & சேதுபதி பட இயக்குனரோடு சித்தார்த் இணைந்த சித்தா... கவனத்தை ஈர்க்கும் டீசர் இதோ!

சித்தார்த்தின் சித்தா பட டீசர் வெளியீடு,Siddharth in chithha movie teaser out now | Galatta

நடிகர் சித்தார்த்தின் நடிப்பில் தயாராகி இருக்கும் சித்தா திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது. தன் திரைப்பயணத்தின் ஆரம்பத்தில் இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குனராக தொடங்கி, பின்னர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கியவர் நடிகர் சித்தார்த். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த சித்தார்த் நடிப்பில் கடைசியாக தமிழில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த டக்கர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட கால காத்திருப்பதற்குப் பிறகு வெளிவந்த டக்கர் திரைப்படத்தை தொடர்ந்து, தனது அடுத்தடுத்த படங்களில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த். அந்த வகையில் சித்தார்த் வரிசையாக நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அதில் முதலாவதாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க, தற்போது தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழும் தயாரிப்பாளர் சசிகாந்த் முதல் முறை இயக்குனராக களமிறங்க, மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் டெஸ்ட் திரைப்படத்திலும் சித்தார்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனிடையே சித்தார்த் நடிப்பில் அடுத்த ரிலீஸுக்கு தயாராகி இருக்கும் திரைப்படம் தான் சித்தா. தனது சொந்த  தயாரிப்பு நிறுவனமான ETAKI என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள சித்தா படத்தை  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த பண்ணையாரும் பத்மினியும் சேதுபதி மற்றும் சிந்துபாத் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் S.U.அருண் குமார் எழுதி இயக்கியுள்ளார். சித்தார்த் மற்றும் நிமிஷயன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த சித்தா திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். 

சுரேஷ் பிரசாத் படத்தொகுப்பு செய்திருக்கும் சித்தா திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பின்னணி இசை சேர்த்துள்ளார். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் இயக்குனரான அருண்குமார் மற்றும் கவிஞர் யுக பாரதி ஆகியோர் சிட்டா படத்தின் பாடல்களை எழுதியுள்ளனர். C.S.பாலச்சந்தர் கலை இயக்கம் செய்திருக்கும் சித்தா திரைப்படத்திற்கு கவிதா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி சித்தா திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. மிகவும் அழுத்தமான கதைக்களத்தில் மக்களின் மனதை தொடும் எமோஷனலான படமாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சித்தார்த்தன் சித்தா திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது. விறுவிறுப்பான இந்த சித்தா படத்தின் டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சித்தா திரைப்படத்தின் டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.