மொய்தீன் பாய் பராக்..! முழு வீச்சில் 'லால் சலாம்' படத்தை முடித்து கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. – படக்குழு பகிர்ந்த அட்டகாசமான தகவல் வைரல்..

லால் சலாம் படத்தை நடித்து முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைரல் பதிவு உள்ளே - Rajinikanth moideen bhai wrap for lal salaam movie | Galatta

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகர்களாக திகழும் மோகன்லால், சுனில், சிவராஜ் குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். உலகளவில் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக அனிருத் இசையில் தமன்னா பாடலாக வெளியான காவலா பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெற்று மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது.  

ஜெயிலர் படத்தையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லைகா தயாரிப்பில் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 170’ திரைப்படத்தை ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய TJ.ஞானவேல் இயக்கவுள்ளார். இப்படத்தின் முதல் கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் முக்கிய கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார்.   லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் கிரிக்கெட் மற்றும் அதன் அரசியலை மையமாக வைத்த திரைப்படமாக தயாராகும் லால் சலாம் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் கபில் தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில், பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு செய்யும் லால் சலாம் திரைப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன்  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு மும்பை போன்ற பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் லால் சலாம் படப்பிடிப்பில்  மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் தற்போது படப்பிடிப்பில் அவரது பங்கை நிறைவு செய்துள்ளார். இது தொடர்பாக படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைப்படத்தை பகிர்ந்து அதனுடன் , "உங்களுடன் பணியாற்றியதும் உங்களை வைத்து திரைப்படம் இயக்கியதும் அற்புதமான ஒன்று அப்பா..” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryarajini)

விதிகளை பின்பற்றாமல் சிக்னலை மீறிய விஜயின் கார்.. அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ்.!
சினிமா

விதிகளை பின்பற்றாமல் சிக்னலை மீறிய விஜயின் கார்.. அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ்.!

“திரைப்படங்கள் இனி 8 வாரங்களுக்கு பின்பு தான் ஒடிடியில் வெளியிட வேண்டும்.” திரையரங்க உரிமையாளர்கள் தீர்மானம்.. விவரம் உள்ளே..
சினிமா

“திரைப்படங்கள் இனி 8 வாரங்களுக்கு பின்பு தான் ஒடிடியில் வெளியிட வேண்டும்.” திரையரங்க உரிமையாளர்கள் தீர்மானம்.. விவரம் உள்ளே..

ஆரவார கொண்டாட்டத்துடன் மூன்றாவது வாரத்தில் வேட்டையாடு விளையாடு.. - ரீரிலீஸ் வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடிய கௌதம் மேனன்..
சினிமா

ஆரவார கொண்டாட்டத்துடன் மூன்றாவது வாரத்தில் வேட்டையாடு விளையாடு.. - ரீரிலீஸ் வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடிய கௌதம் மேனன்..