விதிகளை பின்பற்றாமல் சிக்னலை மீறிய விஜயின் கார்.. அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ்.!

சிக்னலை மீறியதால் நடிகர் விஜய் காருக்கு அபராதம் விவரம் உள்ளே - Thalapathy vijay fined by Traffic police | Galatta

வெகு ஜன மக்களின் ஆதரவை நாளுக்கு நாள் பெருகி வரும் நடிகர் விஜய். திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான ‘வாரிசு’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பில்  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடிதுள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகி வரும் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளது. அதன் பின்னர் தளபதி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் ‘தளபதி 68’ படத்தில் நடிக்கவுள்ளார். ஏ ஜி எஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலகில் மட்டுமல்லாமல் சமூகத்தில் நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல நல தொண்டுகளை செய்து வருகிறார். அதன்படி ஆண்டு தோறும் பல நற்செயல்கள் மக்களிடம் அதிகம் பேசப்பட்டது. இந்த ஆண்டும் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு போது தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்களை அழைத்து நடிகர் விஜய் கல்வி விருது வழங்கும் விழா என்ற பேரில் அவர்களை அழைத்து அவர்களின் கல்விக்கு ஊக்க தொகையும் வழங்கினார். 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விழாவில் விஜய் முழுக்க முழுக்க பங்கேற்று மாணவர்களை சந்தித்தார். இந்த நிகழ்வு தமிழக மக்களிடையே வரவேற்பை பெற்று அதிகம் பெசப்பட்டது. மேலும் இந்நிகழ்வு விஜயின் அரசியல் பயணத்திற்கு தொடக்கமாக அமைந்துள்ளது என அரசியல் விமர்சகர்களும் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த மாபெரும் விழாவினை ஒருங்கிணைத்து நடத்தி முடித்த மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டு நேற்று விஜய் தனது பனையூர் அலுவலகத்தில் வந்தடைந்தா. இந்த அமர்வில் விழா குறித்து பாராட்டுகளையும் மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் நிர்வாகிகளுடன் விவதாதித்ததாக சொல்லப் படுகிறது. இந்த நிகழ்விற்கு வருகை தர காரில் பயணம் செய்த விஜய் கிழக்கு கடற்கரை சாலை அக்கரை பகுதி சிக்னலை மதிக்காமல் மீரியதாக செய்தி பரவியது. இந்த நிகழ்வு நேற்று வைரலாக பேசப்பட்டது. இதையடுத்து நடிகர் விஜய் சிக்னல் மீறியதற்காக ரூ 500 அபராதம் விதிக்கப்படுள்ளது. இதையடுத்து தற்போது ஆன்லைன் மூலம் விஜய் தனது அபராத தொகையான ரூ 500 செலுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

Just IN : Joseph Vijay fined for jumping red signal. pic.twitter.com/7sQUKNcujG

— Manobala Vijayabalan (@ManobalaV) July 11, 2023

நேற்று விஜய் பயணித்த காரின் பின்னால் அவரது ரசிகர்கள் பின் தொடர்ந்து வந்ததினால் இந்த விதி மீறல் நடைபெற்றுள்ளது என ரசிகர்கள் தங்கள் கருத்துகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

'லியோ' படப்பிடிப்பை முடித்த கையோடு மக்கள் இயக்கத்தினரை சந்தித்த தளபதி விஜய்.. பின்னணி என்ன..?
சினிமா

'லியோ' படப்பிடிப்பை முடித்த கையோடு மக்கள் இயக்கத்தினரை சந்தித்த தளபதி விஜய்.. பின்னணி என்ன..?

“உழைப்பாளர்களுக்காக ஓங்கி குரல் கொடுக்கும் திரைப்படம் அநீதி..” இயக்குனர் ஷங்கர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ உள்ளே..
சினிமா

“உழைப்பாளர்களுக்காக ஓங்கி குரல் கொடுக்கும் திரைப்படம் அநீதி..” இயக்குனர் ஷங்கர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ உள்ளே..

தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிரான வழக்கு.. சென்னை நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!
சினிமா

தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிரான வழக்கு.. சென்னை நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!