அழகான புகைப்படங்களுடன் செல்ல மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்.! – வாழ்த்துகளுடன் வைரலாகும் பதிவு உள்ளே..

மகன் பிறந்தநாளுக்கு கியூட் புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்  - Sivakarthikeyan shares adorable photos viral post here | Galatta

தென்னிந்திய ரசிகர்களின் ஆதரவை பெற்று இன்று தமிழ் சினிமா கொண்டாடும் நடிகராக இருந்து வருகிறார் நடிகர் சிவாகார்த்திகேயன். இவரது முந்தைய திரைப்படங்களான டாக்டர், டான் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து தற்போது பாக்ஸ் ஆபிஸ் ஸ்டாராகவும் வலம் வருகிறார். வெற்றி படங்களை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘மாவீரன்’. இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் அட்டகாசமான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் படத்தில் இயக்குனர் மிஷ்கின், சரிதா, மோனிஷா, தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் படத்தில் கூடுதல் சிறப்பாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார். சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விது அய்யனா ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை 14ம் தேதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் தமிழ்நாடு முழுவதும்  வெளியாகவுள்ளது, அதை தொடர்ந்து மாவீரன் திரைப்படம் தெலுங்கில் மகாவீரடு என்ற பெயரிலும் வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று படத்திற்கான ஆவலை மேலும் அதிகரித்துள்ளது. திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில் படத்தின் ரிலீஸ்காண ஆயத்தில் படக்குழுவும் ரசிகர்களும் இருந்து வருகின்றனர்.

இந்த கொண்டாட்டத்தின் மத்தியில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தன் மகன் குகன் தாஸின் இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் “பிறந்த நாள் வாழ்த்துகள் டா தம்பி” என்று பதிவிட்டு மகன் மற்றும் குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதையடுத்து சிவகார்த்திகேயனின் பதிவின் கீழ்   ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் குகன் தாஸ் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் தெரிவித்து புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

 

actor vijay penalized for traffic rules violation check details here

சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதியினரின் இரண்டாவது மகனாக கடந்த 2021ம் ஆண்டு பிறந்த குகன் குறித்து அன்றே தனது தந்தை குறித்தும் சிவகார்த்திகேயன் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலானது. முதல் மகளான ஆராதானவை தொடர்ந்து தற்போது குகன் தாஸ் அவரது சேட்டைகளை அவ்வப்போது சிவகார்த்திகேயன் இணையத்தில் பகிர்ந்து வருவது வழக்கம். அதன்படி தற்போது சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ள பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan)

 

ஆரவார கொண்டாட்டத்துடன் மூன்றாவது வாரத்தில் வேட்டையாடு விளையாடு.. - ரீரிலீஸ் வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடிய கௌதம் மேனன்..
சினிமா

ஆரவார கொண்டாட்டத்துடன் மூன்றாவது வாரத்தில் வேட்டையாடு விளையாடு.. - ரீரிலீஸ் வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடிய கௌதம் மேனன்..

'லியோ' படப்பிடிப்பை முடித்த கையோடு மக்கள் இயக்கத்தினரை சந்தித்த தளபதி விஜய்.. பின்னணி என்ன..?
சினிமா

'லியோ' படப்பிடிப்பை முடித்த கையோடு மக்கள் இயக்கத்தினரை சந்தித்த தளபதி விஜய்.. பின்னணி என்ன..?

“உழைப்பாளர்களுக்காக ஓங்கி குரல் கொடுக்கும் திரைப்படம் அநீதி..” இயக்குனர் ஷங்கர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ உள்ளே..
சினிமா

“உழைப்பாளர்களுக்காக ஓங்கி குரல் கொடுக்கும் திரைப்படம் அநீதி..” இயக்குனர் ஷங்கர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ உள்ளே..