சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட முதல் மாஸ் விமர்சனம் கொடுத்த ராக் ஸ்டார்... ரசிகர்கள் உற்சாகப்படுத்திய அனிருத்தின் பதிவு இதோ!

ரஜினிகாந்தின் ஜெயிலர் பட முதல் விமர்சனம் கொடுத்த அனிருத்,superstar rajinikanth jailer movie first review shared by aniridh | Galatta

முதல்முறையாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்துல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்திருக்கும் ஜெயில் திரைப்படத்தின் முதல் விமர்சனத்தை இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். ஒட்டு மொத்த இந்திய சினிமாவிற்கும் சூப்பர் ஸ்டாராக கடந்த 48 ஆண்டுகளாய் இடைவிடாத தனது ஸ்டைலால் ரசிகர்களை மகிழ்வித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அடுத்தடுத்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் தனது திரைப் பயணத்தில் 171 வது திரைப்படமாக உருவாகும் தலைவர் 171 திரைப்படத்தில் இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்க இருப்பதாக தெரிகிறது. இந்த தலைவர் 171 திரைப்படத்தின் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக தயாராகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் மொய்தீன் பாய் எனும் மிக முக்கிய கௌரவ தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். அடுத்ததாக தனது 170-வது திரைப்படமாக ஜெய் பீம் படத்தில் இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் தலைவர் 170 திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இதனிடையே கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் முதல்முறையாக ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். 

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்கும்,ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். 

வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம் ரிலீஸாகவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த ஜெயிலர் திரைப்படத்தின் அதிரடியான ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், செம்ம மாஸாக வந்த ஜெயிலர் ட்ரெய்லர் இன்னும் எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறது. இயக்குனர் நெல்சனின் கடைசி படமான பீஸ்ட் திரைப்படமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கடைசி படமான அண்ணாத்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் கவனத்தை பெற தவறிய நிலையில், இந்த ஜெயிலர் திரைப்படம் அதனை பூர்த்தி செய்து கொண்டாட வைக்கும் எனவும் ட்ரைலர் வெளியானதில் இருந்து சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. இந்த நிலையில், ஜெயிலர் திரைப்படத்தின் கடைசி மிக்சிங் பணிகளை அணில் முடித்திருப்பதாக தெரிகிறது. எனவே படம் பார்த்த அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் "JAILER 💥💥💥🏆🏆🏆🙌🙌🙌" என பதிவிட்டு இருப்பதால் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தின் முதல் விமர்சனம் கொடுத்திருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகமடைந்து இருக்கின்றனர். ராக் ஸ்டார் அனிருத்தின் அந்தப் பதிவு இதோ…
 

Jailer 💥💥💥🏆🏆🏆🙌🙌🙌

— Anirudh Ravichander (@anirudhofficial) August 4, 2023

துல்கர் சல்மானின் முதல் வெப்சீரிஸ் கன்ஸ் & குலாப்ஸ்... ஃபேமிலி மேன், ஃபர்ஸி இயக்குனர்களின் அடுத்த படைப்பு... அதிரடி ட்ரெய்லர் இதோ!
சினிமா

துல்கர் சல்மானின் முதல் வெப்சீரிஸ் கன்ஸ் & குலாப்ஸ்... ஃபேமிலி மேன், ஃபர்ஸி இயக்குனர்களின் அடுத்த படைப்பு... அதிரடி ட்ரெய்லர் இதோ!

சினிமா

"போட்றா வெடிய!"- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மரண மாஸ் ஆக்ஷனில் வந்த ஜெயிலர் SHOWCASE... மிரட்டலான வீடியோ இதோ!

சினிமா

"OTTயிலும் தொடரும் மாமன்னன் வெற்றிப்பயணம்!"- NETFLIX ட்ரெண்டிங்கில் உலகளவில் டாப் 10க்குள் பிடித்து அதிரடி சாதனை! விவரம் உள்ளே