"OTTயிலும் தொடரும் மாமன்னன் வெற்றிப்பயணம்!"- NETFLIX ட்ரெண்டிங்கில் உலகளவில் டாப் 10க்குள் பிடித்து அதிரடி சாதனை! விவரம் உள்ளே

மாமன்னன் படம் NETFLIX ட்ரெண்டிங்கில் உலகளவில் டாப் 10க்குள் பிடித்து சாதனை,maamannan trending at 9th place in netflix global top10 movies | Galatta

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்து திரையரங்குகளில் ரசிகள்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற மாமன்னன் திரைப்படம் தற்போது NETFLIXல் வெளியாகி NETFLIX ட்ரெண்டிங்கில் உலகளவில் டாப் 10க்குள் பிடித்து மாபெரும் சாதனை படைத்திருக்கிறது. தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் மாரி செல்வராஜ், தனது முதல் படமாக இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படமே மிகப்பெரிய பாதிப்பை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தியது. தொடர்ந்து 2வது படத்தில் நடிகர் தனுஷ் உடன் கைகோர்த்த இயக்குனர் மாரி செல்வராஜ் உருவாக்கிய கர்ணன் திரைப்படம் இன்னும் பெரிய பாதிப்பையும் வசூல் ரீதியில் பெரும் வெற்றியையும் பெற்றது. அடுத்து தனது சொந்த தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் வாழை எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அடுத்ததாக முதல் முறை நடிகர் சீயான் விக்ரமின் மகனும் பிரபல இளம் நடிகருமான துரு விக்ரமுடன் முக்கிய படத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இணைகிறார். மனத்தி P.கணேசன் என்ற கபடி விளையாட்டு வீரரின் பயோபிக் திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இதனிடையே இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் மாத இறுதியில் வெளியான திரைப்படம் தான் மாமன்னன். தற்சமயம் தமிழ் நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகிப்பதால் மொத்தமாக சினிமாவில் இருந்து விலகி முழு நேர மக்கள் பணியில் ஈடுபட முடிவெடுத்த உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மாமன்னன் திரைப்படம் தான் அவரது கடைசி படம். வைகைப்புயல் வடிவேலு அவர்கள் தனது திரைப்பயணத்திலேயே இதுவரை ஏற்று நடிக்காத முழுக்க முழுக்க அழுத்தமான முன்னணி கதாபாத்திரத்தில் மாமன்னன் எனும் கதையின் நாயகனாக நடித்திருப்பது ஆரம்பம் முதலே பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. மிரட்டலான வில்லனாக ஃபகத் ஃபாஸில், புரட்சிகரமான நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஆகியோர் களமிறங்கிய மாமன்னன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையும் கைகொடுத்தது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க தேனி ஈஸ்வர் அவர்களின் ஒளிப்பதிவில், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பு செய்திருக்கும் மாமன்னன் படத்தின் பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கிறார். 

மாமன்னன் திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் மினி கூப்பர் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஜூலை 27ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியான மாமன்னன் உலக அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது. இந்தியாவில் NETFLIX ட்ரெண்டிங்கில் டாப் 10-ல் முதல் இடத்தை பிடித்தது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் NETFLIX ட்ரெண்டிங்கில் டாப் 10-ல் முதல் இடத்தை பிடித்த மாமன்னன் திரைப்படம் பஹ்ரைன், மாலத்தீவுகள், ஓமன், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் டாப் 10ல் இடம் பெற்றுள்ளது. இவற்றுக்கெல்லாம் மேலாக உலக அளவில் NETFLIX ட்ரெண்டிங்கில் டாப் 10 இல் 9வது இடத்தை மாமன்னன் பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவு இதோ…
 

Not just India. #Maamannan is under the top 10 films that has been watched globally on Netflix. No.1 in 2 other countries and among the top 10 in 6 Countries!! Also 1.2M people have watched the film World Wide!

Cheers to breaking those boundaries! #1onNetflixpic.twitter.com/PeZMBSNY70

— Mari Selvaraj (@mari_selvaraj) August 2, 2023

'விடாமுயற்சி'க்கு முன் அஜித்குமார் தனது வெளிநாட்டு பைக் ரைடிங்கை தொடங்கினார்... ஷாலினி பகிர்ந்த ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ!
சினிமா

'விடாமுயற்சி'க்கு முன் அஜித்குமார் தனது வெளிநாட்டு பைக் ரைடிங்கை தொடங்கினார்... ஷாலினி பகிர்ந்த ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ!

சினிமா

"தனியா ரூம்ல இருக்க பயப்படுவாறு!"- இதுவரை வெளிவராத தனுஷின் ஆரம்ப கட்ட திரைப்பயண நினைவுகள்! சுப்பிரமணியம் சிவாவின் ட்ரெண்டிங் வீடியோ

தளபதி விஜயின் லியோ உடன் களமிறங்கும் ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வரராவ்... ரிலீஸ் குறித்த வதந்திகளுக்கு படக்குழுவின் அதிரடி பதில்!
சினிமா

தளபதி விஜயின் லியோ உடன் களமிறங்கும் ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வரராவ்... ரிலீஸ் குறித்த வதந்திகளுக்கு படக்குழுவின் அதிரடி பதில்!