ஷங்கர் முதல் லோகேஷ் கனகராஜ் வரை.. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களுக்கு மணிரத்தினம் கொடுத்த விருந்து.. – விவரம் உள்ளே..

லோகேஷ் கனகராஜ் ஷங்கர் உள்ளிட்ட இயக்குனர்களுக்கு விருந்தளித்த இயக்குனர் மணிரத்தினம் – Maniratnam host special evening for tamil directors | Galatta

இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் மணிரத்னம். தன் தனித்துவமான திரைக்கதையை கவித்துவமாக காட்சியமைத்து ஒவ்வொரு திரைப்படத்தையும் செதுக்கி ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்து பல தசாப்தங்களாக முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே கொண்டு மிகப்பெரிய ஜாம்பனாக இருந்து வருகிறார். இவரது இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 1, 2  ஆகிய திரைப்படங்கள் பிரம்மாண்ட வடிவில் திரைக்கு வந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த மாபெரும் படங்களை தொடர்ந்து உலகநாயகன் கமல் ஹாசன் உடன் நீண்ட ஆண்டுக்கு பின் கூட்டணி அமைத்து ‘KH234’ என்ற படத்தை இயக்கவுள்ளார் இயக்குனர் மணிரத்தினம். உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆரம்பிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் அவரது இல்லத்திற்கு தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களை அழைத்து விருந்து வைத்துள்ளார்.  இந்த நிகழ்வில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் உட்பட இயக்குனரகள்  லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ், லிங்கு சாமி, சசி, கௌதம் வாசுதேவ் மேனன், ஏ ஆர் முருகதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விருந்து குறித்து இயக்குனர் ஷங்கர் அவர்கள் அவரது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் ஸ்லாகித்து பதிவிட்டுள்ளார்.

அவர் பகிர்ந்த பதிவில், “இந்த ஸ்பெஷலான தருணத்திற்கு நன்றி மணி சார்! சிறந்த  மற்றும் கொண்டாடப்படும் இயக்குனர்களுடன் பழகுவதும் அவர்களுடன் நினைவுகளை பகிர்வதும் மற்றும் கார்த்திக் பாடிய சில எவர்க்ரீன் இளையராஜா மற்றும் ஏ ஆர் ரஹ்மான் பாடல்களுக்கு வைப் செய்தது போன்ற தருணங்கள் நான் சம்பாதித்த உண்மையான செல்வமாக உணர்கிறேன்.. உங்கள் உபசரிப்பிற்கு நன்றி சுஹாசினி..” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

A post shared by Shankar Shanmugham (@shanmughamshankar)

இதையடுத்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சந்திப்பு குறித்து “பொன் மாலை பொழுது...” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இயக்குனர் ஷங்கர் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் பதிவு இணையத்தில் ரசிகர்களால் வெகுவாக பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொன்மாலை பொழுது....... ❤️

Means...... Whattaey Lovely Evening.... 😊 pic.twitter.com/QKHmCUkR89

— karthik subbaraj (@karthiksubbaraj) August 4, 2023

மேலும் இந்த சந்திப்பில் இயக்குனர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், சுதா கோங்கரா போன்றவர்கள் பங்கேற்கவில்லை. பட வேலைகளில் பிஸியாக இருந்ததால் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

 “எங்க அண்ணன் ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டார்..” அதிரடியாக பதிலளித்த நடிகர் பிரபு.! – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

“எங்க அண்ணன் ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டார்..” அதிரடியாக பதிலளித்த நடிகர் பிரபு.! – வைரல் வீடியோ உள்ளே..

எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகும் அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’.. – மிரள வைக்கும் அசத்தலான Glimpse – ஐ வெளியிட்ட படக்குழு..
சினிமா

எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகும் அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’.. – மிரள வைக்கும் அசத்தலான Glimpse – ஐ வெளியிட்ட படக்குழு..

“ஜெயிலர் படம் விக்ரம் மாதிரி இருக்கே…” விமர்சனங்களுக்கு விளக்கமளித்த நடிகர் வசந்த் ரவி.. – சுவாரஸ்யமான தகவல் இதோ..
சினிமா

“ஜெயிலர் படம் விக்ரம் மாதிரி இருக்கே…” விமர்சனங்களுக்கு விளக்கமளித்த நடிகர் வசந்த் ரவி.. – சுவாரஸ்யமான தகவல் இதோ..