துல்கர் சல்மானின் முதல் வெப்சீரிஸ் கன்ஸ் & குலாப்ஸ்... ஃபேமிலி மேன், ஃபர்ஸி இயக்குனர்களின் அடுத்த படைப்பு... அதிரடி ட்ரெய்லர் இதோ!

துல்கர் சல்மானின் முதல் வெப்சீரிஸ் கன்ஸ் & குலாப்ஸ் ட்ரெய்லர்,dulquer salmaan in first web series guns and gulaabs trailer out now | Galatta

ஃபேமிலி மேன் மற்றும் ஃபர்ஸி உள்ளிட்ட வெப் சீரிஸ்களின் இயக்குனர்களான ராஜ் மற்றும் டி கே இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் கன்ஸ் & குலாப்ஸ் வெப்சீரிஸ் ட்ரெய்லர் வெளியானது. இந்திய திரையுலகில் முக்கிய நாயகராக திகழும் துல்கர் சல்மான் நடிப்பில், கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழில் ஹே சினாமிக்கா, மலையாளத்தில் சல்யூட், தெலுங்கில் சீதாராமம், ஹிந்தியில் சுப் - ரிவெஞ் ஆஃப் தி ஆர்டிஸ்ட் என நான்கு மொழிகளில் நான்கு படங்கள் வெளிவந்து ஒவ்வொன்றும் நல்ல வரவேற்பை பெற்றன. அடுத்ததாக துல்கர் சல்மான் நடிப்பில் பக்கா கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகி இருக்கும் கிங் ஆப் கோத்தா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் PAN INDIA படமாக வெளிவரவுள்ளது. காரைக்குடியில் படமாக்கப்பட்ட கிங் ஆப் கோட்டா திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த 2023 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகை வெளியீடாக ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 

அடுத்ததாக கடந்த பிப்ரவரி மாதம் தனுஷ் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டாக 100 கோடிக்கு மேல் வசூலித்த வாத்தி திரைப்படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் லக்கி பாஸ்கர் என்ற புதிய திரைப்படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கிறார். தொடர்ந்து ஹாலிவுட்டில் லைஃப் ஆஃப் பை படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த வரும், நிலா என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனரும், வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளிவர இருக்கிற தி ஹன்ட் ஃபார் வீரப்பன் எனும் டாக்குமென்டரி சீரீஸை இயக்கிய இயக்குனர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் காந்தா படத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார்.

முன்னதாக முதல் முறை வெப் சீரிஸிலும் களமிறங்கி இருக்கும் துல்கர் சல்மான் நடிப்பில் கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸ் தயாராகி இருக்கிறது. ஃபேமிலி மேன் மற்றும் ஃபர்ஸி உள்ளிட்ட வெப் சீரிஸ் களின் இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸில் துல்கர் சல்மான், ராஜ்குமார் ராவ் மற்றும் ஆதர்ஷ் கௌரவ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க , குல்ஷான் தேவய்யா, பூஜா கொர், சதீஷ் கௌஷிக், ஸ்ரேயா தன்வந்திரி, டிஜே பானு (தமிழில் வாழ் என்ற படத்தில் நடித்தவர்) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். வித்தியாசமான கேங்ஸ்டர் கதைகளும் கொண்ட வெப் சீரிஸாக தயாராகி இருக்கும் இந்த கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸ்க்கு பங்கஜ் குமார் ஒலிப்பதிவில், சுமித் கொடியன் படத்தொகுப்பு செய்ய, அமன் பண்ட் இசையமைத்துள்ளார். ஹிந்தியில் உருவாகி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்ட கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸ் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ரிலீஸாக இருக்கிறது. இந்த நிலையில் கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. அதிரடியான அந்த கன்ஸ் அண்ட் குலாப்ஸ் ட்ரெய்லர் இதோ…
 

சினிமா

"இளம்கன்றுஸ் எல்லோருக்கும் வாழ்த்துகள்!"- 20 ஆண்டுகளை கடந்த காக்க காக்க படம் பற்றி சூர்யாவின் ஸ்பெஷல் பதிவு! ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ

புது மாப்பிள்ளையாக காதலியை கரம் பிடிக்கும் கவின்... மணமகள் யார்? திருமணம் எப்போது?- அசத்தலான தகவல்கள் இதோ!
சினிமா

புது மாப்பிள்ளையாக காதலியை கரம் பிடிக்கும் கவின்... மணமகள் யார்? திருமணம் எப்போது?- அசத்தலான தகவல்கள் இதோ!

'விடாமுயற்சி'க்கு முன் அஜித்குமார் தனது வெளிநாட்டு பைக் ரைடிங்கை தொடங்கினார்... ஷாலினி பகிர்ந்த ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ!
சினிமா

'விடாமுயற்சி'க்கு முன் அஜித்குமார் தனது வெளிநாட்டு பைக் ரைடிங்கை தொடங்கினார்... ஷாலினி பகிர்ந்த ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ!